நண்பர்களுக்கு வணக்கம், மீண்டுமொரு புதிய பதிவுடன் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. “லக்கி லூக்”அறிமுகம் தேவையில்லாத நாயகன் என்றாலும், புதிய வாசகர்களுக்காகவும், லக்கி லூக்கைப்பற்றி அடிப்படை மற்றும் சில சுவாரஸ்யத்தகவல்களுடனும் , எனக்கு லக்கி பரிச்சயமானது பற்றிய சம்பவங்களையும் பிரதானமாக கொண்டு இப்பதிவிட்டுள்ளேன்.வரலாற்று சம்பவங்களை மையமாக கொண்ட கதைகள், வாழ்ந்து மறைந்த கதாபாத்திரங்களைத்தழுவி உருவாக்கப்பட்ட காதாபாத்திரங்கள் இதுபோன்று லக்கி லூக்கைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விசயங்கள் இருக்கின்றது. தொடரும் நாட்களில் லக்கி-யைப்பிரதானமாக கொண்ட பதிவுகளை நம் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கலாம்.
"LUCKY LUKE,THE COWBOY SHOOTS FASTER THAN HIS SHADOW,FIGHTS INJUSTICE AND RIDES JOLLY JUMPER.THE SMARTEST HORSE IN THE WORLD, MOST OF THESE COMIC BOOKS INCORPORATE CHARACTERS FROM HISTORY".
“லக்கி லூக்”- புயலையும்விட வேகமாக சுடக்கூடிய ஒரு கெளபாய்.சொல்லப்போனால் தன் நிழலையும்விட வேகமாகச் சுடக்கூடியவன். இவரின் அறிமுகப்பக்கங்களிலும், புத்தகங்களின் பின்னட்டைகளிலும் இவ்வாறனதாக இருக்கும் இவரைப்பற்றிய வர்ணனைகள்.ஜாலி ஜம்பர், ரிண்டின்கேன், டால்டன் பிரதர்ஸ் என இவர்களுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள்.வலைத்தளத்தில் ‘லக்கி லூக்’ என்று டைப்பினால் இவரைப்பற்றிய தகவல்கள் வந்து குவியும்.எனவே அரைத்த மாவையே அரைக்காமல் சில சுவாரஸ்யத்தகவல்களுடன் லக்கியுடனான எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்.
1946 டிசம்பர் 7-ல் ‘Franco-Belgian Comics' இதழான ‘SPIROU'-ல் ஓவியர் “மோரிஸ்” என்பவரால் ‘Arizona 1880' என்ற கதையில் அறிமுகமானார் லக்கி லூக்.அதன் வரவேற்பைத்தொடர்ந்து 1949-லிருந்து முழுநீளக்கதைகளில் தலைக்காட்டத்தொடங்கினார்.அன்றிலிருந்து இன்று வரை உலகின் பல மொழிகளில் வெளியாகி அனைவரின் மனங்களையும் தனது நகைச்சுவைத்தோரணங்களால் கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்றனர் லக்கி லூக் குழுவினர்.கிட்டத்தட்ட 70 வருடங்களாக, 30-க்கும் மேற்பட்ட மொழிகளில், 80-க்கும் மேலான சித்திரக்கதைகளின் மூலமும்,திரைப்படங்கள், அனிமேக்ஷன் படங்கள், வீடியோ கேம்கள் என பல்வேறு ஊடகங்களின் வழியாக சிரிக்க வைப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் இந்த ஒல்லிபிச்சான் ஹீரோ உண்மையிலேயே ‘காமெடியில் குண்டன்’-தான்.
லக்கி லூக் - தமிழ் அவதாரம்:
தமிழில் லக்கி லூக்கை ஜீனியர் லயன் காமிக்ஸ் மூலம் அறிமுகப்படுத்தி,தனது எழுத்துத்திறமையால் மேலும் மெருகேற்றி நம்மிடம் தரமான ஒரு நகைச்சுவை நாயகனை கொண்டு சேர்த்த லயன் - முத்து காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும்.லக்கி லூக்கின் தமிழ் உரிமைகள் பெற்றதையும்,அது பற்றிய தகவல்களையும் “சிங்கத்தின் சிறு வயதில்” தொடரில் சுவாரஸ்யமாக கூறியிருப்பார். லக்கி லூக் கதை வரிசையில் அனைத்து கதைகளுமே தரமான காமெடி விருந்துதான்,எந்த கதையுமே சோடை போனதில்லை, விற்பனையிலும் கூட. எல்லாதரப்பு வாசகர்களின் மனதையும் கொள்ளை கொண்ட பெருமை வன்மேற்கின் இந்த காமெடி கெளபாய்க்கு உண்டு. லக்கி லூக்கின் கதைகளில் வரலாற்று பின்னனியைக்கொண்டு புனையப்பட்ட கதைகள் ஏராளம்.மேற்குறிப்பிட்டதுபோல் வாழ்ந்து மறைந்த கதாபாத்திரங்களை மையப்படுத்தி பெரும்பாலான காமிக்ஸ் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.வரும் நாட்களில் இதற்கென ஒரு தனிப்பதிவிட்டிட வேண்டியதுதான். காமிக்ஸ் ரசிகர்களால் சிரிப்பின் அடையாளமாகிப்போன லக்கி பெயரளவில் மட்டுமல்லாது உண்மையிலேயே லக்கியான நபர்தான்...! - நமது மறுவருகையான "Come Back Special" - கூட முதல் கதையாக இவரது சாகஸங்களே இடம்பெற்றிருக்கும்.
மோரிஸ் & கோஸினி (1957 - 1986):
மோரிஸின் ஆக்கத்தில் அனைவர் மனதையும் கவர்ந்த நமது கெளபாயின் கிராப், கதாசிரியராக கோஸினியின் கைகோர்ப்பில் புகழின் உச்சத்தைத்தொட்டது.இவர்களிருவரும் சேர்ந்து பணியாற்றிய கதைகள் இன்றளவுக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக லக்கி லூக் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது.மேலும் இது லக்கி லூக் கதைகளின் பொற்காலம் என்றும் ரசிகர்களால் வர்ணிக்கப்படுகின்றது.லயன் காமிக்ஸ் பிப்ரவரி மாத வெளியீடான ‘ஒரு பட்டா போட்டி’(The Oklahoma Land Rush-1960) சாட்சாத் இவர்கள் இருவரது கைவண்ணமே.
ஒரு தலைமுறையை தங்களின் கைவண்ணத்தால் கட்டிப்போட்டது மட்டுமல்லாமல் வளரும் தலைமுறைக்கு தங்களின் படைப்புகளை விட்டுச்சென்றுள்ள இந்த காமிக்ஸ் பிதாமகர்களின் திறமைக்கு ஆழ்மனதிலிருந்து நன்றி கலந்த வணக்கங்கள்.
வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த இவரின் படைப்புகள் சிறப்பானதொரு தேர்வுதானென்றாலும், லக்கி லூக்கின் விசயத்திலும் சின்னதொரு நெருடல் எல்லோர் மனதிலும் இருப்பதென்னவோ உண்மைதான். ஆறாவது விரல் என புகைப்பிடிப்பவர்களால் வர்ணிக்கப்படும் “சிகரெட்”-தான் அது.ஜாலி ஜம்பரும் - லக்கியும் எப்படி இணைபிரியா நண்பர்களோ அதுபோலத்தான் லக்கியும்-லக்கி’யின் வாயில் உள்ள சிகரெட்டும். சமூக ஆர்வலர்களால் அவ்வப்போது விமர்ச்சிக்கப்பட்டாலும் 1968-ம் ஆண்டு மோரிஸ்-கோஸினி ஆக்கத்தில் வெளிவந்த "Le pied tendre"(The Tenderfoot)-ல் கதையின் ஒரு பகுதியாக, நண்பனுடைய இறப்பின் வலியைத்தாங்க முடியாத லக்கி லூக் புகைப்பதுக்கு தயாராவது போல் வெளியான பகுதிகள், விமர்சகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.“சிகரெட் புகைப்பதென்பது லக்கியின் காதாபாத்திரத்துடன் ஒன்றியது- பாப்பாய் வாயிலுள்ள 'Pipe'-யைப்போல” என்று விமர்சகர்களுக்கு பதிலலித்தார் மோரிஸ்.குழந்தைகள் உட்பட பலதரப்பட்ட ரசிகர்களைக்கொண்டவர் லக்கி என்பதால், அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு லக்கி லூக் புகைப்பிடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
1983-ல் வெளியான The Fingers என்ற கதையிலிருந்து Cigarette-க்கு பதிலாக Straw மாற்றம் செய்யப்பட்டு புத்தகம் வெளிவந்தது.இதற்காக "WHO"-வின் விருதும் மோரிஸ் அவர்களுக்கு கிடைத்தது.தற்போதைய நமது வெளியீடுகளில் லக்கி புகைப்பது போலிருந்தால், அது இதற்கு முந்தைய காலகட்டத்தில் வெளியான புத்தகங்களே.லயன் காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயனும் இந்த மாற்றத்தை பற்றி “Lion New Look Special"ல் “1970களின் துவக்கங்களில் உருவான கதைகள் இவை என்பதால் லக்கியின் உதடுகளில் தம்மாத்துண்டு ‘தம்’ constant ஆக இருந்திடுவதைக்காணலாம்! சமீபமாய் வந்திடும் லக்கி கதைகளில், தலைவர் ‘தம்’மை கைவிட்டுவிட்டு, symbolic ஆக வாயில் ஒரு புல்லினை மேய்வதை கவனித்திருப்பீர்கள்” என குறிப்பிட்டிருப்பார். லக்கி லூக்கின் மாற்றம் குறித்த மோரிஸின் ஓவியத்தையும், நகைச்சுவையுணர்வுடணான ஒரு ரசிகரின் ஓவியத்தையும் பாருங்களேன்.கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய மாற்றம்தான்.
லக்கி லூக்கும் நானும்:
எனக்கு காமிக்ஸ் அறிமுகமான காலகட்டத்தில் ஏகப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன.ராணி காமிக்ஸ் ரூ.2/- விலையில் மாதமிருமுறை தொடர்ச்சியாக வாங்கிக்கொண்டிருந்தேன்.வரும் நாட்களில் லயன் - முத்து’வின் அறிமுகத்திற்கு பின்னர் பட்ஜெட்டில் துண்டுவிழ ஆரம்பித்தது. புத்தகக்கடைக்குச்சென்றால் நான் வாங்காத பிரதிகள் நிறைய தொங்கிக்கொண்டிருக்கும்.கையில் இருக்கும் பணத்திற்கு என்ன புத்தகம் கிடைகிறதோ அதை வாங்கிவிடுவென் (நான் பணம் என்று குறிப்பிடுவது ரூ.1.50/- மற்றும் ரூ.2/- யைத்தான்...!). பல நாட்கள் என் கையில் உள்ள பணத்திற்கு தகுந்தாற்போல விலையில் காமிக்ஸ் கிடைக்காது, ஏமாற்றத்துடன் திரும்பிய நாட்களவை.என்னிடமுள்ள ராணி காமிக்ஸின் பிரதிகளை நண்பர்களுக்கு வாடகைக்கு வாசிக்கக்கொடுத்து காமிக்ஸ் வாங்க பணம் சேமிக்கத்தொடங்கினேன். முகமூடி வீரர் மாயாவி (வேதாளர்) கதைகளுக்கு 40 பைசா, மற்ற கதைகளுக்கு 20 பைசா என்பது வாடகை கட்டணம் என்ற நண்பர்களுடனான உடன்படிக்கையுடன் காமிக்ஸ் கனவை நனவாக்க முயன்றுகொண்டிருந்தேன்.போன புத்தகங்கள் போனதோடு சரி திரும்பி வருவதில்லை என்ற நிலையில் இம்முயற்சியுடன், பல புத்தகங்களையும் சேர்த்து துறக்க வேண்டியதாயிற்று.கையில் கொஞ்சம் கணிசமான சேமிப்பு தேறவே காமிக்ஸ் வேட்டையாட கிளம்பினேன். இந்த முறை என் கையில் நான்கு காமிக்ஸ் புத்தகங்கள், இன்னுமொரு புத்தகம் வாங்க பணம் மீதமிருந்தது, ஆனால் கையிலோ இரண்டு புத்தகங்கள் ஒன்று மாடஸ்டி (ஆவியின் பாதையில்) மற்றொன்று லக்கி லூக் (மேடையில் ஒரு மன்மதன்). மாடஸ்டியா...? மன்மதனா...? என்ற சிந்தனையில் நான் குழம்பிக்கிடக்க “தம்பி இந்த புக்க எடுத்துக்கப்பா...! இது கலர்ல இருக்கும்...!” என்கிற கடைக்காரரின் அறிவுருத்தலின்படி கடைசியில் வென்றது மன்மதனே. “மேடையில் ஒரு மன்மதன்” மூலம் எனக்கு ‘லக்கி லூக்’ என்ற நண்பன் அறிமுகமானது இவ்வாறே.வண்ணத்தில் காமிக்ஸ் புத்தகம் என்றதும், வாங்கிய புத்தகங்களில் முதல் வாசிப்பு லக்கி லூக்’கே.அன்றிலிருந்து இன்று வரை மாத அட்டவனையில் லக்கி இருந்தால் முதல் மரியாதை ஒல்லி பிச்சான் கெளபாய்க்கே என்றாகிப்போனது.
தொடர்ந்த மாதங்களில் “ஒரு கோச் வண்டியின் கதை”- விலா நோகச்செய்யும் நகைசுவைக்கதை.லக்கியின் கதைகளில் நான் அதிகம் ரசித்த கதையும் இதுவே.தங்கத்துடன் சில பயணிகளையும் ஏற்றிக்கொண்டு இலக்கை நோக்கிப்பயணப்படும் கோச் வண்டிக்கு காவலாகச்செல்கிறார் லக்கி.வண்டி இலக்கை எட்டும்முன் அதை கொள்ளையடிக்க பலர் முயல்கின்றனர்.அனைத்தையும் முறியடித்து வண்டி பயண இலக்கையடைய லக்கி மேற்கொள்ளும் சிரத்தைகளை அழகான காமெடித்தோரணமாக்கி கதை பின்னப்பட்டிருக்கும்.புரட்சித் தீ-யை அடுத்த பெரும்பான்மை வாசகர்களின் ஓட்டு இக்கதைக்குத்தானிருக்கும்.
லக்கி லூக் -25:
டிசம்பர் 1971, ‘லக்கி லூக்’-கின் வயது 25.
Source: Afranio Braga and Louis-Hughes Jacquin.
The image source: BDGest: graphics "Blueberry's". Gribouillachde: Achdé drawings.
என்னதான் காமெடி களேபரங்கள் இருந்தாலும் கதையின் இறுதிக்கட்டம் (Frame) ஒன்றுதான். இதுவும் கூட லக்கியின் சிறப்புகளில் ஒன்றே...!இன்னும் பல சிறப்புகளைக்கொண்ட இவரைப்பற்றி தொடரும் பல பதிவுகளில் விவாதிப்போம்.அதுவரை Have a lot fun with Lucky Comic. . . !
- பயணங்கள் தொடரும் . . .
"LUCKY LUKE,THE COWBOY SHOOTS FASTER THAN HIS SHADOW,FIGHTS INJUSTICE AND RIDES JOLLY JUMPER.THE SMARTEST HORSE IN THE WORLD, MOST OF THESE COMIC BOOKS INCORPORATE CHARACTERS FROM HISTORY".
மோரிஸ் வரையும் கதாபாத்திரங்கள் பார்த்தவுடனேயே அதன் குணாதிசயங்களை , பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய இலகு வாய்ந்தவை. |
“லக்கி லூக்”- புயலையும்விட வேகமாக சுடக்கூடிய ஒரு கெளபாய்.சொல்லப்போனால் தன் நிழலையும்விட வேகமாகச் சுடக்கூடியவன். இவரின் அறிமுகப்பக்கங்களிலும், புத்தகங்களின் பின்னட்டைகளிலும் இவ்வாறனதாக இருக்கும் இவரைப்பற்றிய வர்ணனைகள்.ஜாலி ஜம்பர், ரிண்டின்கேன், டால்டன் பிரதர்ஸ் என இவர்களுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள்.வலைத்தளத்தில் ‘லக்கி லூக்’ என்று டைப்பினால் இவரைப்பற்றிய தகவல்கள் வந்து குவியும்.எனவே அரைத்த மாவையே அரைக்காமல் சில சுவாரஸ்யத்தகவல்களுடன் லக்கியுடனான எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்.
1946 டிசம்பர் 7-ல் லக்கி லூக் அறிமுகம் ‘Arizona 1880' |
லக்கி லூக் - தமிழ் அவதாரம்:
தமிழில் லக்கி லூக்கை ஜீனியர் லயன் காமிக்ஸ் மூலம் அறிமுகப்படுத்தி,தனது எழுத்துத்திறமையால் மேலும் மெருகேற்றி நம்மிடம் தரமான ஒரு நகைச்சுவை நாயகனை கொண்டு சேர்த்த லயன் - முத்து காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும்.லக்கி லூக்கின் தமிழ் உரிமைகள் பெற்றதையும்,அது பற்றிய தகவல்களையும் “சிங்கத்தின் சிறு வயதில்” தொடரில் சுவாரஸ்யமாக கூறியிருப்பார். லக்கி லூக் கதை வரிசையில் அனைத்து கதைகளுமே தரமான காமெடி விருந்துதான்,எந்த கதையுமே சோடை போனதில்லை, விற்பனையிலும் கூட. எல்லாதரப்பு வாசகர்களின் மனதையும் கொள்ளை கொண்ட பெருமை வன்மேற்கின் இந்த காமெடி கெளபாய்க்கு உண்டு. லக்கி லூக்கின் கதைகளில் வரலாற்று பின்னனியைக்கொண்டு புனையப்பட்ட கதைகள் ஏராளம்.மேற்குறிப்பிட்டதுபோல் வாழ்ந்து மறைந்த கதாபாத்திரங்களை மையப்படுத்தி பெரும்பாலான காமிக்ஸ் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.வரும் நாட்களில் இதற்கென ஒரு தனிப்பதிவிட்டிட வேண்டியதுதான். காமிக்ஸ் ரசிகர்களால் சிரிப்பின் அடையாளமாகிப்போன லக்கி பெயரளவில் மட்டுமல்லாது உண்மையிலேயே லக்கியான நபர்தான்...! - நமது மறுவருகையான "Come Back Special" - கூட முதல் கதையாக இவரது சாகஸங்களே இடம்பெற்றிருக்கும்.
ஜீனியர் லயனில் (01 ஜனவரி 1987) லக்கி லூக்கின் அறிமுகப்படலம். |
மோரிஸ் & கோஸினி (1957 - 1986):
மோரிஸின் ஆக்கத்தில் அனைவர் மனதையும் கவர்ந்த நமது கெளபாயின் கிராப், கதாசிரியராக கோஸினியின் கைகோர்ப்பில் புகழின் உச்சத்தைத்தொட்டது.இவர்களிருவரும் சேர்ந்து பணியாற்றிய கதைகள் இன்றளவுக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக லக்கி லூக் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது.மேலும் இது லக்கி லூக் கதைகளின் பொற்காலம் என்றும் ரசிகர்களால் வர்ணிக்கப்படுகின்றது.லயன் காமிக்ஸ் பிப்ரவரி மாத வெளியீடான ‘ஒரு பட்டா போட்டி’(The Oklahoma Land Rush-1960) சாட்சாத் இவர்கள் இருவரது கைவண்ணமே.
ஒரு தலைமுறையை தங்களின் கைவண்ணத்தால் கட்டிப்போட்டது மட்டுமல்லாமல் வளரும் தலைமுறைக்கு தங்களின் படைப்புகளை விட்டுச்சென்றுள்ள இந்த காமிக்ஸ் பிதாமகர்களின் திறமைக்கு ஆழ்மனதிலிருந்து நன்றி கலந்த வணக்கங்கள்.
“ஒரு ஜெண்டில்மேனின் கதை” -யில் விமர்சனத்திற்குள்ளான பக்கங்கள். |
வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த இவரின் படைப்புகள் சிறப்பானதொரு தேர்வுதானென்றாலும், லக்கி லூக்கின் விசயத்திலும் சின்னதொரு நெருடல் எல்லோர் மனதிலும் இருப்பதென்னவோ உண்மைதான். ஆறாவது விரல் என புகைப்பிடிப்பவர்களால் வர்ணிக்கப்படும் “சிகரெட்”-தான் அது.ஜாலி ஜம்பரும் - லக்கியும் எப்படி இணைபிரியா நண்பர்களோ அதுபோலத்தான் லக்கியும்-லக்கி’யின் வாயில் உள்ள சிகரெட்டும். சமூக ஆர்வலர்களால் அவ்வப்போது விமர்ச்சிக்கப்பட்டாலும் 1968-ம் ஆண்டு மோரிஸ்-கோஸினி ஆக்கத்தில் வெளிவந்த "Le pied tendre"(The Tenderfoot)-ல் கதையின் ஒரு பகுதியாக, நண்பனுடைய இறப்பின் வலியைத்தாங்க முடியாத லக்கி லூக் புகைப்பதுக்கு தயாராவது போல் வெளியான பகுதிகள், விமர்சகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.“சிகரெட் புகைப்பதென்பது லக்கியின் காதாபாத்திரத்துடன் ஒன்றியது- பாப்பாய் வாயிலுள்ள 'Pipe'-யைப்போல” என்று விமர்சகர்களுக்கு பதிலலித்தார் மோரிஸ்.குழந்தைகள் உட்பட பலதரப்பட்ட ரசிகர்களைக்கொண்டவர் லக்கி என்பதால், அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு லக்கி லூக் புகைப்பிடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
1983-ல் வெளியான The Fingers என்ற கதையிலிருந்து Cigarette-க்கு பதிலாக Straw மாற்றம் செய்யப்பட்டு புத்தகம் வெளிவந்தது.இதற்காக "WHO"-வின் விருதும் மோரிஸ் அவர்களுக்கு கிடைத்தது.தற்போதைய நமது வெளியீடுகளில் லக்கி புகைப்பது போலிருந்தால், அது இதற்கு முந்தைய காலகட்டத்தில் வெளியான புத்தகங்களே.லயன் காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயனும் இந்த மாற்றத்தை பற்றி “Lion New Look Special"ல் “1970களின் துவக்கங்களில் உருவான கதைகள் இவை என்பதால் லக்கியின் உதடுகளில் தம்மாத்துண்டு ‘தம்’ constant ஆக இருந்திடுவதைக்காணலாம்! சமீபமாய் வந்திடும் லக்கி கதைகளில், தலைவர் ‘தம்’மை கைவிட்டுவிட்டு, symbolic ஆக வாயில் ஒரு புல்லினை மேய்வதை கவனித்திருப்பீர்கள்” என குறிப்பிட்டிருப்பார். லக்கி லூக்கின் மாற்றம் குறித்த மோரிஸின் ஓவியத்தையும், நகைச்சுவையுணர்வுடணான ஒரு ரசிகரின் ஓவியத்தையும் பாருங்களேன்.கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய மாற்றம்தான்.
எனக்கு காமிக்ஸ் அறிமுகமான காலகட்டத்தில் ஏகப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன.ராணி காமிக்ஸ் ரூ.2/- விலையில் மாதமிருமுறை தொடர்ச்சியாக வாங்கிக்கொண்டிருந்தேன்.வரும் நாட்களில் லயன் - முத்து’வின் அறிமுகத்திற்கு பின்னர் பட்ஜெட்டில் துண்டுவிழ ஆரம்பித்தது. புத்தகக்கடைக்குச்சென்றால் நான் வாங்காத பிரதிகள் நிறைய தொங்கிக்கொண்டிருக்கும்.கையில் இருக்கும் பணத்திற்கு என்ன புத்தகம் கிடைகிறதோ அதை வாங்கிவிடுவென் (நான் பணம் என்று குறிப்பிடுவது ரூ.1.50/- மற்றும் ரூ.2/- யைத்தான்...!). பல நாட்கள் என் கையில் உள்ள பணத்திற்கு தகுந்தாற்போல விலையில் காமிக்ஸ் கிடைக்காது, ஏமாற்றத்துடன் திரும்பிய நாட்களவை.என்னிடமுள்ள ராணி காமிக்ஸின் பிரதிகளை நண்பர்களுக்கு வாடகைக்கு வாசிக்கக்கொடுத்து காமிக்ஸ் வாங்க பணம் சேமிக்கத்தொடங்கினேன். முகமூடி வீரர் மாயாவி (வேதாளர்) கதைகளுக்கு 40 பைசா, மற்ற கதைகளுக்கு 20 பைசா என்பது வாடகை கட்டணம் என்ற நண்பர்களுடனான உடன்படிக்கையுடன் காமிக்ஸ் கனவை நனவாக்க முயன்றுகொண்டிருந்தேன்.போன புத்தகங்கள் போனதோடு சரி திரும்பி வருவதில்லை என்ற நிலையில் இம்முயற்சியுடன், பல புத்தகங்களையும் சேர்த்து துறக்க வேண்டியதாயிற்று.கையில் கொஞ்சம் கணிசமான சேமிப்பு தேறவே காமிக்ஸ் வேட்டையாட கிளம்பினேன். இந்த முறை என் கையில் நான்கு காமிக்ஸ் புத்தகங்கள், இன்னுமொரு புத்தகம் வாங்க பணம் மீதமிருந்தது, ஆனால் கையிலோ இரண்டு புத்தகங்கள் ஒன்று மாடஸ்டி (ஆவியின் பாதையில்) மற்றொன்று லக்கி லூக் (மேடையில் ஒரு மன்மதன்). மாடஸ்டியா...? மன்மதனா...? என்ற சிந்தனையில் நான் குழம்பிக்கிடக்க “தம்பி இந்த புக்க எடுத்துக்கப்பா...! இது கலர்ல இருக்கும்...!” என்கிற கடைக்காரரின் அறிவுருத்தலின்படி கடைசியில் வென்றது மன்மதனே. “மேடையில் ஒரு மன்மதன்” மூலம் எனக்கு ‘லக்கி லூக்’ என்ற நண்பன் அறிமுகமானது இவ்வாறே.வண்ணத்தில் காமிக்ஸ் புத்தகம் என்றதும், வாங்கிய புத்தகங்களில் முதல் வாசிப்பு லக்கி லூக்’கே.அன்றிலிருந்து இன்று வரை மாத அட்டவனையில் லக்கி இருந்தால் முதல் மரியாதை ஒல்லி பிச்சான் கெளபாய்க்கே என்றாகிப்போனது.
தொடர்ந்த மாதங்களில் “ஒரு கோச் வண்டியின் கதை”- விலா நோகச்செய்யும் நகைசுவைக்கதை.லக்கியின் கதைகளில் நான் அதிகம் ரசித்த கதையும் இதுவே.தங்கத்துடன் சில பயணிகளையும் ஏற்றிக்கொண்டு இலக்கை நோக்கிப்பயணப்படும் கோச் வண்டிக்கு காவலாகச்செல்கிறார் லக்கி.வண்டி இலக்கை எட்டும்முன் அதை கொள்ளையடிக்க பலர் முயல்கின்றனர்.அனைத்தையும் முறியடித்து வண்டி பயண இலக்கையடைய லக்கி மேற்கொள்ளும் சிரத்தைகளை அழகான காமெடித்தோரணமாக்கி கதை பின்னப்பட்டிருக்கும்.புரட்சித் தீ-யை அடுத்த பெரும்பான்மை வாசகர்களின் ஓட்டு இக்கதைக்குத்தானிருக்கும்.
லக்கி லூக் -25:
டிசம்பர் 1971, ‘லக்கி லூக்’-கின் வயது 25.
கொண்டாட்டங்களுக்கு தகுதியான நபர்தான் இந்த “Poor lonesome cowboy". லக்கி லூக்கின் 25 வயது கொண்டாட்டங்களை மேலும் சிறப்பிக்க ஒரு ‘சிறப்பிதழ்’ வெளியிட முடிவு செய்தது ‘Pilote' நிறுவனம்.
December 9, 1971 "Pilote-no:631" |
Bretecher, Got, Solé, Gotlin, Druillet, Martial, Briden, Loro போன்றவர்கள் தங்களது கைவண்ணங்களால் இதழை சிறப்பிக்க முன்வர, தங்கக்கல்லறை புகழ் Jean Girad மேலும் ஒரு படி மேலே சென்று நான் ஏன் லக்கி லூக்கை வரையக்கூடாது, எனது பாணியிலான லக்கி லூக்கை அனைவரும் கண்டு ரசியுங்கள் என 'LE-PIED TENDRE' (The Tenderfoot)-ன் பக்கங்களை வரைந்து மோரிஸுக்கு பரிசளித்தார்.இதுவே ‘ஒரு ஜெண்டில்மேனின் கதை’(பக்கம் எண் - 18) என்ற பெயரில் லயன் காமிக்ஸில் வந்தது. பதிலுக்கு மோரிஸ் அவரின் பங்கிற்கு "La Mine de l'Allemand perdu" (The lost Dutchman's Mine - தங்கக்கல்லறை) இதழின் பக்கங்களை Lieutenant Blueberry-க்கு பதிலாக லக்கி லூக் சாகஸம் புரிந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கட்டவிழ்த்துவிட அந்த கற்பனையின் அற்புதத்தை நீங்களே பாருங்களேன்.இந்தப்பக்கங்கள் லக்கி லூக் சிறப்பிதலாக “Pilote" வெளியீட்டு எண்:631-ஆக டிசம்பர் 9,1971-ல் வெளிவந்தது.
Picture 01:Lucky Luke © René Goscinny, Morris and Jean Giraud 1971.
Picture 02:Lucky Luke © René Goscinny and Morris 1967-1968.
“ஜீன் கிராடின்” கைவண்ணமும் - “மோரிஸின்” கைவண்ணமும் தமிழில் “ஒரு ஜென்டில்மேனின் கதை” |
Picture 01:Lucky Luke © Jean-Michel Charlier and Morris 1971.
Picture 02:Blueberry © Jean-Michel Charlier and Jean Giraud 1969.
தங்கக்கல்லறையின் பக்கங்கள் “லக்கி லூக்” பாணியில். |
JEAN GIRAD - க்கு மரியாதை:
2001-ம் ஆண்டு மோரிஸின் மறைவுக்குப்பின்னர் லக்கி லூக்’கின் சித்திர பொறுப்பு பிரெஞ்ச் எழுத்தாளரும்-ஓவியருமான Hervé Darmenton (Aka) Achdé விடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் 2012 - ம் ஆண்டு மார்ச் 10 அன்று Jean Girad மறைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், “Jean Girad - Morris" இருவருக்குமான நட்பை சிறப்பிக்கும் விதத்திலும் Achde அவர்களால் ஜீன் கிராடின் "Blueberry's," (கிராடின் ஓவியத்தொகுப்பு) புத்தகத்திலிருந்து இரண்டு ஓவியங்கள் எடுத்து லக்கி லூக்- பாணியில் வரையப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
"Blueberry's", page 39. Acrylic and pen and ink. Poster Ed Stardom,1995.Blueberry, with Pearl,dueling in a saloon... The honor of Achde in his own words:"I had fun in transcribing my way two illustrations of the late Jean in the world of Lucky Luke. A small exercise extrovert style of frameworks "a'laMorris"".
"Blueberry's", page 41. Acrylic and pen and ink. . Poster, Ed Stardom, 1996.Blueberry,. in Achdé design, are also present the Brothers Dalton, the biggest opponents of Lucky Luke - the saloon cabin.
"Blueberry's", page 39. Acrylic and pen and ink. Poster Ed Stardom,1995.Blueberry, with Pearl,dueling in a saloon... The honor of Achde in his own words:"I had fun in transcribing my way two illustrations of the late Jean in the world of Lucky Luke. A small exercise extrovert style of frameworks "a'laMorris"".
"Blueberry's", page 41. Acrylic and pen and ink. . Poster, Ed Stardom, 1996.Blueberry,. in Achdé design, are also present the Brothers Dalton, the biggest opponents of Lucky Luke - the saloon cabin.
Source: Afranio Braga and Louis-Hughes Jacquin.
The image source: BDGest: graphics "Blueberry's". Gribouillachde: Achdé drawings.
என்னதான் காமெடி களேபரங்கள் இருந்தாலும் கதையின் இறுதிக்கட்டம் (Frame) ஒன்றுதான். இதுவும் கூட லக்கியின் சிறப்புகளில் ஒன்றே...!இன்னும் பல சிறப்புகளைக்கொண்ட இவரைப்பற்றி தொடரும் பல பதிவுகளில் விவாதிப்போம்.அதுவரை Have a lot fun with Lucky Comic. . . !
- பயணங்கள் தொடரும் . . .
அருமை சார் ....லக்கியை பற்றிய அதிகம் தெரியாத செய்திகளை அழகாக எடுத்துரைத்து உள்ளீர்கள் ...மனம் கனிந்த பாராட்டுகள் ...
ReplyDeleteதொடருங்கள் ...தொடர்கிறேன் ...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... பாராட்டுவதோடு நில்லாமல் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் நண்பரே...!
Deleteலக்கியை பற்றிய தெரியாத செய்திகளை எடுத்துரைத்ததுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteஅடுத்தபதிவை எதிர்பார்த்துகாத்திருக்கிரேன்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... கண்டிப்பாக சுவாரஸ்யம் தரக்கூடிய தலைப்பில் பதிவிட முயற்சிக்கிறேன் நண்பரே...
Deleteமேலே உள்ள இருவரின் கருத்தையே நான் வழி மொழிகின்றேன்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... உங்களுக்கான நேரத்தை செலவிட்டு பதிவை படிப்பதோடு நில்லாமல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.
DeleteYou have Missed boom boom padalam ji.. One of the best too.. Nice post
ReplyDeleteYa well bro... it's a nice story too... thanks for the visit and opinion,thank again.
Deleteதெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் என்பதைப்போல லக்கி லூக் பற்றிய அரிய தகவல்களை தந்ததற்கும், மேலும் தரவிருப்பதற்கும் நன்றிகள்..!
ReplyDeleteலக்கியின் கதைகள் எல்லாமே சிறந்தவை என்றாலும், எனக்கு மிகவும் பிடித்தவை ஒரு கோச் வண்டியின் கதை மற்றும் கௌ பாய் எக்ஸ்பிரஸ்.நன்றி .தொடருங்கள்....தொடர்கிறேன்..!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... தற்போதைய பதிவிற்காக “ஒரு ஜெண்டில்மேனின் கதை”-யை மீள்வாசித்தேன். செவ்விந்தியன் சாம் - பட்லரின் கூத்துக்கள் நினைத்து நினைத்து சிரிக்க வைத்தது.நன்றிகள் மோரிஸ் & கோஸினி.
ReplyDeleteஅட்டகாசம் நண்பர் SSS அவர்களே! தகவல்களைத் திரட்டுவதிலும், நேர்த்தியாய் அதைக் கொடுத்த விதத்திலும் உங்களது மெனக்கெடல் ஆச்சர்யப்படுத்துகிறது! தொடர்ந்து பட்டையைக் கிளப்புங்கள்! :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... உங்களின் நல்லாதரவு என்றும் தேவை நண்பரே.
Deleteநல்லா இருக்கு தம்பி. நிறைய சொல்லுங்க.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...
Delete:)
ReplyDeleteஅருமை.
// 2001-ம் ஆண்டு மோரிஸின் மறைவுக்குப்பின்னர் லக்கி லூக்’கின் சித்திர பொறுப்பு பிரெஞ்ச் எழுத்தாளரும்-ஓவியருமான Hervé Darmenton (Aka) Achdé விடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில் 2012 - ம் ஆண்டு மார்ச் 10 அன்று Jean Girad மறைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், “Jean Girad - Morris" இருவருக்குமான நட்பை சிறப்பிக்கும் விதத்திலும் Achde அவர்களால் ஜீன் கிராடின் "Blueberry's," (கிராடின் ஓவியத்தொகுப்பு) புத்தகத்திலிருந்து இரண்டு ஓவியங்கள் எடுத்து லக்கி லூக்- பாணியில் வரையப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.//
மனிதர்கள் தான் வீழ்ந்தார்கள் அவர்களின் படைப்பு என்றும் உயிர்ப்புடன்..
//Jean Girad - Morris//
ஜாம்பவான்கள்.
Super நண்பரே!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...
ReplyDeleteNice article sir, best wishes, please continue..
ReplyDeleteThanks for the visit and opinion sir.
DeleteNice article sir, best wishes, please continue..

Delete