“தங்கக்கல்லறை” நான் படித்த காமிக்ஸ் கதைகளில் ‘ULTIMATE' என்று இன்றளவும் என்னை எண்ணச்செய்யும் ஒரு அற்புதமான கதை. நான் காமிக்ஸ் வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச காலத்திலேயே எனக்கு வாசிக்க கிடைத்த இரண்டாவது கெளபாய் கதை, மட்டுமல்லாது எடிட்டரின் அருமையான மொழிபெயர்ப்பு, கதையின் ஆழம், சித்திரத்தரம் என ஒட்டுமொத்தமாக சிறப்பான புத்தகமாக “கேப்டன் டைகர்-இந்தியாவில் முதன் முறையாக” என்ற கம்பீரமான Caption - உடன் என் (நம்) கையில் சேர்ந்த கதை.காமிக்ஸ் காதலர்கள் அனைவரது மனதிலும் “தங்கக்கல்லறை” நீங்கா இடம்பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை.
லயன் - முத்து காமிக்ஸ் அறிமுகமாகி தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசித்த கதைதான் தங்கக்கல்லறை என்றாலும்,அது ஏற்படுத்திய தாக்கம் ரசனையின் மற்றொரு பரிமாணத்தையும்,நான் காமிக்ஸ்-மேல் வைத்திருந்த ஒரு Image-யையும் ஒட்டுமொத்தமாக நொருக்கி “இதுதான்டா காமிக்ஸ் என்று எண்ணச்செய்தது”.
தங்கக்கல்லறையை அச்சமயம் கருப்பு&வெள்ளை புத்தகத்தில் வாசித்ததற்கும், இக்காலத்தில் வண்ணத்தில் வாசித்ததற்குமான ஒப்பீடே இந்தப்பதிவின் முக்கிய நோக்கம்.அதற்கு முன்னர், நமது ஆசிரியர் “தங்கக்கல்லறை”-யின் மறுபதிப்பு + தரம் குறித்து சமீபத்திய 250-வது பதிவில் நம்மிடம் பகிர்ந்துள்ள சில கருத்துக்களை படித்துக்கொள்வது நலம். “எல்லாமே வெண்ணெய் பூசிய சாலைகள் மீதான பயணத்துக்கு சமானம் போலும் என்று ஒரு சின்னக் கனவு எனக்குள்ளே குடிபுகுந்திருந்த நாட்களில் தான் செவிட்டோடு விழுந்தது சாத்து – “தங்கக் கல்லறை“ ரூபத்தில்! ஒரிஜினலின் பக்கங்களில் இருந்த பலூன்களைப் பெருசாக்கி, அதற்குள் நீள-நீள தமிழ் வசனங்களை அடைக்க முடியும் என்பதைக் கூட நானும், நமது DTP அணியினரும் அறிந்திருக்காப் பொழுது அது! தங்கக் கல்லறையின் நமது தமிழ் ஒரிஜினல் வசனங்களை வண்ணத்தில் அந்த பலூன்களுக்குள் அடைப்பது இயலாக் காரியம் என்பதை உணர்ந்த போதே அதனை rewrite செய்திட கருணையானந்தம் அவர்களிடம் அனுப்பியிருந்தேன்! அவரும் இயன்றளவு crisp ஆக எழுதி – சின்னதொரு குறிப்போடு எனக்கு அனுப்பியிருந்தார்! ‘நம் வாசகர்களிடம் – இரண்டு விதமான பாணிகளிலான ஒரே கதை இருக்கப் போகிறது! நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்‘ என்று ! அவர் அனுப்பிய ஸ்கிரிப்டை நான் மேற்கொண்டு rewrite செய்து – இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டுத் தயார் பண்ணி – இறுமாப்பாய் உங்களுக்குக் கூரியர் செய்த கையோடு இங்கே வலைப்பதிவின் முன்னே அமர்ந்து காத்திருப்பைத் தொடங்கினேன்! ஆனால் சீறி வந்ததோ ஒரு சாத்து மழை!! சும்மா தெளியத் தெளிய ஷிப்ட் போட்டு ஒரு வாரம் தொடர்ந்ததல்லவா மண்டகப்படி!! ‘என்னமாய் வசனத்தை மாற்றப் போச்சு?‘ என்று பொங்கிய நண்பர்களின் ஆத்திரத்தை என்னால் இன்றைக்கே முழுசுமாய் புரிந்து கொள்ள முடியாத நிலையில் – அன்றைய ‘கொழந்தைப் புள்ள‘ நாட்களில் கேட்கவும் வேண்டுமா? இன்றளவுக்கு எனக்கும், கருணையானந்தம் அவர்களுக்கும் அந்நாட்களது ஒரிஜினல் வசனநடையினை "காலத்தை வென்ற வரிகளாகப்" பார்த்திடவோ; புது version-ஐ கழிசடையாகக் கருதிடவோ துளியும் காரணங்கள் புரியவில்லை...!”. இந்தப்பதிவின் முழுவிபரங்களைக்கான “பயணமே பதிவாய்...”-யைக் காணவும்.
தங்கக்கல்லறை - கதைச்சுருக்கம்:
எல்லாமே ஆரம்பிப்பது அரிஸோனா மாநிலத்தின் சிறுநகரமான பலோமிடாவில்-தான்.பணத்தாசை பிடித்த தங்கவேட்டையர்களை பிரஜைகளாகக்கொண்ட அந்நகரத்தில் ஜனங்களிடையே சட்டம் ஒழுங்கை பராமரிக்க மார்க்ஷலாக அனுப்பி வைக்கப்பட்ட யு.எஸ். இராணுவ அதிகாரிதான் நம்முடைய கதாநாயகன் கேப்டன் டைகர்.அவருடைய டெபுடிதான் குடிகாரன் ஜிம்மி.லக்னர், பார்னட்டிடம் வாங்கிய 250 - டாலரை திருப்பித்தராமல் ஏமாற்றியதாலும், தன்னுடைய தங்கச்சுரங்கத்தில் பாதி தருவதாக மேலும் ஏமாற்றுவதாலும் மதுபானக்கடையில் இருவருக்குமிடையே துப்பாக்கிச்சண்டை ஏற்படுகின்றது.டைகரின் தலையீட்டால் சண்டை முடிவுக்குவர, பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு லக்னரை கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார் டைகர்.இதற்கிடையே வெகுமதி வேட்டையர்களான கோலேவும்,வாலியும் லக்னரைத்தேடி வருகின்றனர்.பார்னட் கும்பலின் சூழ்ச்சியால் டைகர் நகரின் மறுமூலையில் சிக்கிக்கொள்ளகிறார்.இதற்கிடையே பார்னட் கும்பல் ஜெயிலை தகர்த்து லக்னரை பழிவாங்க முயற்சிக்கிறது. சூழ்நிலையையும் - ஜிம்மியின் பேராசையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் லக்னர். தனது திறமையினாலும் ஜிம்மியின் மதியூகத்தாலும் டைகர் உட்பட அனைவரது கண்ணீரிலும் மண்ணைத்தூவிவிட்டு,இருவரும் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்.
கேப்டன் டைகர், வாலி-கோலே மூவரும் அவரவர் வழியில் லக்னரையும்-ஜிம்மியையும் தேடிச்செல்வதில் ஆரம்பிக்கிறது கதை.தங்களது இலக்கை அடையும் வரை அவர்களுக்குள் விதி விளையாடும் ஆட்டங்கள் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும்.இச்சுவாரஸ்யத்தை புத்தகத்தை வாசித்தே பெற முடியும்.நமது பெரும்பாலான வாசகர்களால் கொண்டாடப்படும் இப்புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்“தங்கக்கல்லறை - Online Purchase".
மறுபதிப்பு - ஒரு வாசகனின் எதிர்பார்ப்பில்:
தங்கக்கல்லறை 1995-ம் வருட முதற்பதிப்பின்போதே வாசிக்க பாக்யம் கிடைத்த வாசகர்களுள் நானும் ஒருவன்.முத்து காமிக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கதையை இரண்டு பாகமாக வெளியிட்டனர்.படிக்க ஆரம்பித்த உடனேயே கதையின் போக்கில் உள்ள விறுவிறுப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது.முதல் பாகத்தை முடித்ததும் அதன் கிளைமாக்ஸ் என்னவாகும் என சிந்தனையிலேயே இரண்டு மூன்று நாட்களை கடத்திவிட்டேன்.அந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் முதல் பாகத்தை ஒரு நான்கைந்து முறையாவது படித்திருப்பேன்(இன்றுவரை தங்கக்கல்லறை எத்தனை முறை மீள்வாசித்திருக்கிறேன் என்பது கணக்கிட்டு கூற முடியாத அளவிற்கு மீள்வாசித்தாயிற்று).புத்தகத்தை தருவிப்பதில் உள்ளூர் ஏஜெண்டின் தாமத்ததையும் சேர்த்து ஒன்றறை மாத இடைவெளியில் கிடைத்த இரண்டாம் பாகத்தை வாசித்து முடித்தவுடன்தான் நிம்மதியாயிற்று.எடிட்டரும் ஒட்டுமொத்த முத்து காமிக்ஸில் அவருக்கு பிடித்த கதைகள் என ஒரு பத்து புத்தகங்களின் பெயரை ஒரு இதழில் பட்டியலிட்டிருப்பார், அதில் முதல் இடம் தங்கக்கல்லறைக்குத்தான்.பெரும்பாலான வாசகர்களுக்கும் நினைவில் நின்ற கதைவரிசையில் டைகரின் இந்த Out & Out, Wild West சாகஸத்திற்கு நிச்சய இடமுண்டு.
“தங்கக்கல்லறை” - நான் கையில் வைத்திருக்கும் புத்தகத்திற்கு வயது இருபது.இடைபட்ட காலங்களில் எத்தனையோ தடவை புத்தகத்தை வாசித்தாலும் கடுகளவும் சுவாரஸ்யம் குறையவில்லை. Internet பரவலான காலகட்டத்தில் கூகிலாண்டவரின் உதவியோடு வண்ணத்தில் இதன் ஆங்கில பதிப்பு வாசிக்கக்கிடைத்தது.பேராசை யாரைதான் விட்டது.என்னதான் வண்ணத்தில் - கணினியில் வாசித்தாலும் அந்த புத்தக வாசனையுடன், கையில் புத்தகம் தவழ, கண்கள் குளிர நமது தாய்மொழியில் வாசிக்கும் அனுபவமே வேறில்லையா...!?.ரூபாய்.10/-க்கு வந்துகொண்டிருந்த நமது இதழ்களே ஒழுங்காக வருவதில்லை,இதில் விலை அதிகம் என்கிற Complaint - வேறு.இந்த நிலையில் “த ங் க க் க ல் ல றை...... அதுவும் வண்ணத்தில்...... வெறும் பிதற்றலென்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.இவ்வுலகம் ஒவ்வொரு நொடியும் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் மாயலோகம் என்பது உண்மைதான் என எண்ணச்செய்யும் விதமாக நமது லயன் - முத்து காமிக்ஸின் வண்ணமிகு மறுவருகையும் நடந்தேறியது.அதே வேகத்தில் “தங்கக்கல்லறை” வண்ணத்தில்-மறுபதிப்பாக என்ற முத்து காமிக்ஸின் அறிவிப்பையும் சேர்த்து.வழக்கமான அறிவிப்புடன் நின்றுவிடாமல் புதுப்பொலிவுடன் இதழும் கைக்கு வந்து சேர்ந்தது.இருபது வருடங்களுக்கு முன்னர் எதிர்பார்ப்பில்லாமல் படிக்க ஆரம்பித்து படித்து-ரசித்த தெரிந்த கதையை, எதிர்பார்ப்புடன் வண்ணத்தில் படிக்க ஆரம்பித்தேன். வாசித்து முடிக்கும் போது ஏதொவொன்று குறைவதாக தோன்றியது. நமது ரசனையின் எல்லைகள் மாறிவிட்டதோ...! என்ற நினைப்பில் சிறிய சஞ்சலம் தட்டவே முதற்பதிப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.It's always rock to read...!.இரண்டு பதிப்பும் வாசித்தவர்களுக்கே இரண்டுக்குமுள்ள வித்தியாசங்கள் அர்த்தப்படும்(வசனத்தில் ஆசிரியரின் பங்கு எவ்வளவு முக்கியமானதென்று). நேரடியாக வண்ணத்தில் வாசிக்க வாய்ப்பு கிடைத்தவர்களுக்கான அனுகூலம் முழுக்கதையையும் ஒரே தொகுப்பாக கிடைத்ததுதான்.இப்பொழுதும் நான் புத்தகக்காட்சிக்கு செல்லும்போதெல்லாம் முதலில் நான் கையில் எடுப்பது தங்கக்கல்லறையின் பிரதிகளைத்தான்.புதிய நண்பர்களுக்கு பரிசளிக்க எப்போதும் ஒரு 5 பிரதிகளாவது என் கையில் வைத்திருப்பேன்.இம்முறை பொங்கல் புத்தகக்கண்காட்சிக்கு சென்றிருந்தபொழுதும் நான் தேடியது தங்கக்கல்லறை பிரதிகளைத்தான், கண்காட்சிக்கு கடைசி தினம் என்பதால் ஸ்டாலில் Out of Stock.
நான் விரும்புவதெல்லாம் மறுபதிப்பாகும் புத்தகங்கள் தரத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்குமென்பதே. தற்போதைய மும்மூர்த்திகளின் மறுபதிப்புத்தரம் நன்றாகவே உள்ளது. ‘கார்ஸனின் கடந்தகாலம்’ என்னால் ஜீரணிக்கவே இயலவில்லை. ஒரு பக்கத்திற்குள் நான்கு Image-களைப் பொருத்த முயன்று பக்கங்கள் முழுவதும் இழுத்தது போன்ற வடிவமைப்பில் ஒட்டுமொத்தமாக சொதப்பலான முயற்சியாக ஆகியிருந்தது. கதைத்தேர்விலும், புத்தக வடிவமைப்பிலும். குறைவான விலையிலும் நம்மை திருப்திபடுத்தும் ஆசிரியர் இதுமாதிரியான விக்ஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம்.மீண்டுமொரு சுவாரஸ்யமான பதிவுடன் சந்திப்போம் நண்பர்களே.
- பயணங்கள் தொடரும்.
தங்கக்கல்லறை I & II பாகங்களின் அட்டைப்படங்கள் |
லயன் - முத்து காமிக்ஸ் அறிமுகமாகி தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசித்த கதைதான் தங்கக்கல்லறை என்றாலும்,அது ஏற்படுத்திய தாக்கம் ரசனையின் மற்றொரு பரிமாணத்தையும்,நான் காமிக்ஸ்-மேல் வைத்திருந்த ஒரு Image-யையும் ஒட்டுமொத்தமாக நொருக்கி “இதுதான்டா காமிக்ஸ் என்று எண்ணச்செய்தது”.
தங்கக்கல்லறை I & II பாகங்களின் காமிக்ஸ்-டைம் பக்கங்கள் |
தங்கக்கல்லறை - கதைச்சுருக்கம்:
எல்லாமே ஆரம்பிப்பது அரிஸோனா மாநிலத்தின் சிறுநகரமான பலோமிடாவில்-தான்.பணத்தாசை பிடித்த தங்கவேட்டையர்களை பிரஜைகளாகக்கொண்ட அந்நகரத்தில் ஜனங்களிடையே சட்டம் ஒழுங்கை பராமரிக்க மார்க்ஷலாக அனுப்பி வைக்கப்பட்ட யு.எஸ். இராணுவ அதிகாரிதான் நம்முடைய கதாநாயகன் கேப்டன் டைகர்.அவருடைய டெபுடிதான் குடிகாரன் ஜிம்மி.லக்னர், பார்னட்டிடம் வாங்கிய 250 - டாலரை திருப்பித்தராமல் ஏமாற்றியதாலும், தன்னுடைய தங்கச்சுரங்கத்தில் பாதி தருவதாக மேலும் ஏமாற்றுவதாலும் மதுபானக்கடையில் இருவருக்குமிடையே துப்பாக்கிச்சண்டை ஏற்படுகின்றது.டைகரின் தலையீட்டால் சண்டை முடிவுக்குவர, பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு லக்னரை கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார் டைகர்.இதற்கிடையே வெகுமதி வேட்டையர்களான கோலேவும்,வாலியும் லக்னரைத்தேடி வருகின்றனர்.பார்னட் கும்பலின் சூழ்ச்சியால் டைகர் நகரின் மறுமூலையில் சிக்கிக்கொள்ளகிறார்.இதற்கிடையே பார்னட் கும்பல் ஜெயிலை தகர்த்து லக்னரை பழிவாங்க முயற்சிக்கிறது. சூழ்நிலையையும் - ஜிம்மியின் பேராசையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் லக்னர். தனது திறமையினாலும் ஜிம்மியின் மதியூகத்தாலும் டைகர் உட்பட அனைவரது கண்ணீரிலும் மண்ணைத்தூவிவிட்டு,இருவரும் ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்.
கதையின் இறுதிக்காட்சிகள் நடைபெரும் “சூப்பர்ஸ்டிசன்” மலையின் எழில்மிகுத்தோற்றம். |
மறுபதிப்பு - ஒரு வாசகனின் எதிர்பார்ப்பில்:
தங்கக்கல்லறை 1995-ம் வருட முதற்பதிப்பின்போதே வாசிக்க பாக்யம் கிடைத்த வாசகர்களுள் நானும் ஒருவன்.முத்து காமிக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கதையை இரண்டு பாகமாக வெளியிட்டனர்.படிக்க ஆரம்பித்த உடனேயே கதையின் போக்கில் உள்ள விறுவிறுப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது.முதல் பாகத்தை முடித்ததும் அதன் கிளைமாக்ஸ் என்னவாகும் என சிந்தனையிலேயே இரண்டு மூன்று நாட்களை கடத்திவிட்டேன்.அந்த இரண்டு மூன்று நாட்களுக்குள் முதல் பாகத்தை ஒரு நான்கைந்து முறையாவது படித்திருப்பேன்(இன்றுவரை தங்கக்கல்லறை எத்தனை முறை மீள்வாசித்திருக்கிறேன் என்பது கணக்கிட்டு கூற முடியாத அளவிற்கு மீள்வாசித்தாயிற்று).புத்தகத்தை தருவிப்பதில் உள்ளூர் ஏஜெண்டின் தாமத்ததையும் சேர்த்து ஒன்றறை மாத இடைவெளியில் கிடைத்த இரண்டாம் பாகத்தை வாசித்து முடித்தவுடன்தான் நிம்மதியாயிற்று.எடிட்டரும் ஒட்டுமொத்த முத்து காமிக்ஸில் அவருக்கு பிடித்த கதைகள் என ஒரு பத்து புத்தகங்களின் பெயரை ஒரு இதழில் பட்டியலிட்டிருப்பார், அதில் முதல் இடம் தங்கக்கல்லறைக்குத்தான்.பெரும்பாலான வாசகர்களுக்கும் நினைவில் நின்ற கதைவரிசையில் டைகரின் இந்த Out & Out, Wild West சாகஸத்திற்கு நிச்சய இடமுண்டு.
“தங்கக்கல்லறை” - நான் கையில் வைத்திருக்கும் புத்தகத்திற்கு வயது இருபது.இடைபட்ட காலங்களில் எத்தனையோ தடவை புத்தகத்தை வாசித்தாலும் கடுகளவும் சுவாரஸ்யம் குறையவில்லை. Internet பரவலான காலகட்டத்தில் கூகிலாண்டவரின் உதவியோடு வண்ணத்தில் இதன் ஆங்கில பதிப்பு வாசிக்கக்கிடைத்தது.பேராசை யாரைதான் விட்டது.என்னதான் வண்ணத்தில் - கணினியில் வாசித்தாலும் அந்த புத்தக வாசனையுடன், கையில் புத்தகம் தவழ, கண்கள் குளிர நமது தாய்மொழியில் வாசிக்கும் அனுபவமே வேறில்லையா...!?.ரூபாய்.10/-க்கு வந்துகொண்டிருந்த நமது இதழ்களே ஒழுங்காக வருவதில்லை,இதில் விலை அதிகம் என்கிற Complaint - வேறு.இந்த நிலையில் “த ங் க க் க ல் ல றை...... அதுவும் வண்ணத்தில்...... வெறும் பிதற்றலென்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.இவ்வுலகம் ஒவ்வொரு நொடியும் ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் மாயலோகம் என்பது உண்மைதான் என எண்ணச்செய்யும் விதமாக நமது லயன் - முத்து காமிக்ஸின் வண்ணமிகு மறுவருகையும் நடந்தேறியது.அதே வேகத்தில் “தங்கக்கல்லறை” வண்ணத்தில்-மறுபதிப்பாக என்ற முத்து காமிக்ஸின் அறிவிப்பையும் சேர்த்து.வழக்கமான அறிவிப்புடன் நின்றுவிடாமல் புதுப்பொலிவுடன் இதழும் கைக்கு வந்து சேர்ந்தது.இருபது வருடங்களுக்கு முன்னர் எதிர்பார்ப்பில்லாமல் படிக்க ஆரம்பித்து படித்து-ரசித்த தெரிந்த கதையை, எதிர்பார்ப்புடன் வண்ணத்தில் படிக்க ஆரம்பித்தேன். வாசித்து முடிக்கும் போது ஏதொவொன்று குறைவதாக தோன்றியது. நமது ரசனையின் எல்லைகள் மாறிவிட்டதோ...! என்ற நினைப்பில் சிறிய சஞ்சலம் தட்டவே முதற்பதிப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.It's always rock to read...!.இரண்டு பதிப்பும் வாசித்தவர்களுக்கே இரண்டுக்குமுள்ள வித்தியாசங்கள் அர்த்தப்படும்(வசனத்தில் ஆசிரியரின் பங்கு எவ்வளவு முக்கியமானதென்று). நேரடியாக வண்ணத்தில் வாசிக்க வாய்ப்பு கிடைத்தவர்களுக்கான அனுகூலம் முழுக்கதையையும் ஒரே தொகுப்பாக கிடைத்ததுதான்.இப்பொழுதும் நான் புத்தகக்காட்சிக்கு செல்லும்போதெல்லாம் முதலில் நான் கையில் எடுப்பது தங்கக்கல்லறையின் பிரதிகளைத்தான்.புதிய நண்பர்களுக்கு பரிசளிக்க எப்போதும் ஒரு 5 பிரதிகளாவது என் கையில் வைத்திருப்பேன்.இம்முறை பொங்கல் புத்தகக்கண்காட்சிக்கு சென்றிருந்தபொழுதும் நான் தேடியது தங்கக்கல்லறை பிரதிகளைத்தான், கண்காட்சிக்கு கடைசி தினம் என்பதால் ஸ்டாலில் Out of Stock.
நான் விரும்புவதெல்லாம் மறுபதிப்பாகும் புத்தகங்கள் தரத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்குமென்பதே. தற்போதைய மும்மூர்த்திகளின் மறுபதிப்புத்தரம் நன்றாகவே உள்ளது. ‘கார்ஸனின் கடந்தகாலம்’ என்னால் ஜீரணிக்கவே இயலவில்லை. ஒரு பக்கத்திற்குள் நான்கு Image-களைப் பொருத்த முயன்று பக்கங்கள் முழுவதும் இழுத்தது போன்ற வடிவமைப்பில் ஒட்டுமொத்தமாக சொதப்பலான முயற்சியாக ஆகியிருந்தது. கதைத்தேர்விலும், புத்தக வடிவமைப்பிலும். குறைவான விலையிலும் நம்மை திருப்திபடுத்தும் ஆசிரியர் இதுமாதிரியான விக்ஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம்.மீண்டுமொரு சுவாரஸ்யமான பதிவுடன் சந்திப்போம் நண்பர்களே.
- பயணங்கள் தொடரும்.
தங்க கல்லறை முதல்பதிப்பின் பேச்சுத்தமிழில் அமைந்த மொழி பெயர்ப்பே சிறப்பாக இருந்தது.
ReplyDeleteகா.க.கா.வை பொறுத்தவரை உங்கள் கருத்துகளோடு உடன்படுகிறேன். வண்ணத்தில் வந்தும் ஏமாற்றமளித்த இதழ்....!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... வரும் காலங்களில் முதற்பதிப்பில் உள்ள தவறுகளைத்திருத்தி மறுபதிப்புகளை வெளியிட்டால் நன்றாக இருக்கும்...!
Deleteலக்கி லூக், சிக் பில் கதைகளுக்கு அடுத்து மனதை பறிகொடுத்த கெளபாய் படக்கதைகளில் தங்ககல்லறையும் ஒன்று.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... “மின்னும் மரணம்” படித்துவிட்டீர்களா நண்பரே. இல்லையென்றால் கண்டிப்பாக படித்துப்பார்க்கவும்.
Deleteதங்க தலைவனின் கதைகள் தமிழ் காமிக்சில் ஒரு மைல் கல்...
ReplyDeleteஅட்டகாசமான பதிவு..
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... Lieutenant Blueberry (Aka) Captain Tiger-யை மையமாக வைத்து நிறைய கதைகள் உருவாக்கப்படவேண்டும் என்பதே என் எண்ணம்!

DeleteGood keep it up.
ReplyDeleteWelcome bro... thank for the visit and opinion...
DeleteTigerin mika periya vaetrikku karanam aasiriya avarai thanga kallarayil arimuka paduthiyathuthan .. Aduthu udane minnum maranam .. Athanal avarukku periya rasikar vattam uruvakivittathu.. Thanga kallarai matrum Minnum maranam irandu yenakku pidikkum yenbathai yaaridamum solla vendam.
ReplyDelete:) varukaikum, karuthukalukum nandri nanbarey... Kandipaaga yaaridamum solla mataen :)...
Deleteஅழகான அருமையான பதிவு சார் ...முதன்முறை தங்க கல்லறை இரண்டு பாகமும் ஒன்று சேர்ந்து படித்து முடித்தவுடன் அதன் தாக்கம் மனதினுள் பல நாள் ஒன்றியிருந்தது ...மீள் வாசிப்பு எனும் போது வண்ணத்தில் எடுப்பதை விட கறுப்பு வெள்ளை இதழை தான் மனம் நாடுகிறது ..அதன் காரணமாகவே என் பெயர் டைகர் இதழை கூட கறுப்பு வெள்ளையில் மட்டுமே முன் பதிவு செய்துள்ளேன் ..
ReplyDeleteஅழகான எழுத்து நடை தெளிவான கருத்துக்கள் ..பாராட்டுக்கள் சார் ...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பரணி சார்... எல்லோருடைய ரசனையும் ஒத்துப்போவதில்லை.சிலருக்கு வண்ணத்திலும், சிலருக்கு கருப்பு-வெள்ளையிலும் நாட்டமிருக்கும்.தங்கக்கல்லறை வண்ணத்தில் கருப்பு-வெள்ளை புத்தகத்தின் மொழிபெயர்ப்போடு வெளிவந்திருந்தால் உங்கள் மனமும் வண்ணபுத்தகத்தையே நாடும் என்பதில் உண்மையில்லாமலில்லை. மேக்னஸின் ‘எமனின் வாசலில்’ வண்ணத்தில் வந்திருந்தால் கண்டிப்பாக ஏமாற்றமேற்பட்டிருக்கும்.டைகர் வண்ணத்தில் ரசிக்கப்படவேண்டியவர் - முயன்று பாருங்களேன்.பாராட்டுக்களுக்கு நன்றிகள்.
Deleteஒரு வேண்டுகோள் சார் ..
ReplyDeleteமறவாமல் உங்கள் பதிவுகள் வந்தவுடன் லயன் ப்ளாகில் ஒரு லிங்க் கொடுங்கள் ..போன பதிவில் ஓவியர் பற்றிய பார்வை அழகு ...இப்போது தான் பார்க்க முடிந்தது ..உங்கள் தந்தையாரிடம் இவனை ஓவிய கல்லூரியில் சேர்த்து விடுவங்கள் என்று சொன்னது போல நடந்த நிகழ்வு ...எனது சிறு வயதிலும் நடந்தேறியது மனதினுள் இப்போது மத்தாப்பாய் பூக்கிறது ...ஆனால் அது நடைபெறாத ஒன்றாகி போனதில் எனது வருத்த ஏக்கங்களில் பலவற்றில் அவற்றும் ஒன்று ...
அடுத்த பதிவின்போது கண்டிப்பாக லிங்க் கொடுக்கின்றேன். எல்லோருக்கும் எல்லாம் அமைவதில்லை பரணி சார்...! ஓவியத்தை உங்கள் பொழுதுபோக்காக மாற்றிக்கொள்ளுங்கள்.உங்களுக்கானது உங்களுக்கு வாய்க்கும்...?!
Deleteதோழரே டைகரை அருமையாக வரைந்துள்ளீர்கள். தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயம் எங்களின் மும்மூர்த்திகளை ஓவியத்தில் உங்கள் பாணியில் தோன்ற செய்வீர்களா? தங்கள் கைவண்ணத்தில் மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஜானிநீரோ ஸ்டெல்லா ஆகியோரை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ராஜேந்திரன் A.T சார்...! மன்னிக்கவும் “டைகர்” நான் வரைந்த அட்டைப்படங்கள் கிடையாது.எல்லாம் அதன் ஆங்கில ஒரிஜினல்களே. நீங்கள் விரும்பிய வண்ணம் மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஜானிநீரோ ஸ்டெல்லா ஆகியோரைப்பற்றிய பதிவிடும்போது எனது கைவண்ணதில் இவர்களை நீங்கள் காணலாம்.
Deleteஅருமையான பதிவு நண்பரே! ஒரு பதிவுக்கு என்னென்ன அம்சங்கள் தேவையோ அத்தனையையும் கொண்டிருக்கிறது. உங்கள் எழுத்துநடையும் ஆச்சர்யப்படுத்துகிறது!
ReplyDeleteஅருமை! அருமை! வாழ்த்துகள்!!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... உங்களின் ஆதரவும், பாராட்டுக்களுமே ஒவ்வொரு பதிவையும் மேலும் மெருகேற்ற உதவுகிறது.மேலும் ஒருமுறை நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
DeleteI like your thoughts sir, nice..
ReplyDeleteWelcome Sir... Thanks for the visit & opinion...
Deleteexcellent eaasy

Delete