நண்பர்களுக்கு வணக்கம், மீண்டும் ஒரு பதிவுடன் உங்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. இந்த மாதத்து இதழ்களை அதிகம் எதிர்பார்த்திருந்தேன். பட்டியலில் சாகஸ வீரர் ரோஜர் இருப்பது மற்றொன்று “தீபாவளி with TEX”-ம் தான் எதிர்பார்ப்பிற்கான காரணம்.டெக்ஸ் என்றாலே ஹிட் என்ற
நிலையில், இந்த மாதம் டெக்ஸ் புத்தகத்தை எதிர்பார்த்திருந்தது டெக்ஸிற்காக அல்ல, அதன்
ஓவியத்திற்காக. எடிட்டர் ஏற்கனவே இக்கதையின் ஓவியங்களை சிலாகித்தும்,கதையின் சில பேனல்களை
வெளியிட்டும் எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்தார்.ஒவியரின் 7 வருட உழைப்பு ஒவ்வொரு கோடுகளிலும்
தெரிகிறது.ஓவியருக்கு ஒரு மிகப்பெரிய Thumbs up. உண்மையில் படித்து, ரசித்து பாதுகாக்க வேண்டிய கலைப்பொக்கிக்ஷம் இந்த “தீபாவளி with TEX”.
என் பெயர் டைகர்:
“என் பெயர் டைகர்” - முன்பதிவிற்கு கீழே உள்ள Link-யை க்ளிக் செய்யவும்.
ஆர்வமுடன் இந்த மாதத்து இதழ்களை புரட்டிக்கொண்டிருக்கும்போதே, கூடவே மனதும் சில விக்ஷயங்களைப்புரட்டிக்கொண்டிருந்தது. என்னதான் வயதாகியிருந்தாலும் காமிக்ஸ் கையில் வந்தவுடன் நடப்பு வயது காலாவதியாகி நம்மை இளம் பருவத்துக்கிட்டுச்செல்வது நம் காமிக்ஸ் காலர்களுக்கே வாய்க்கும் ஒன்று.ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை “எனக்கு மட்டும்தான் இப்படித்தோன்றுகிறதா. . . ?” என நான் நினைக்கும் விக்ஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.இதில் ஒன்றிரெண்டு அல்ல பல விக்ஷயங்கள் நீங்களும் நினைத்திருக்கலாம்-நிகழ்ந்திருக்கலாம், ஏனென்றால் நாம் அனைவரும் ‘காமிக்ஸ்’ என்ற ஒரே மழையின் கீழ் நனைந்துகொண்டிருக்கிறோம் அல்லவா.அதனாலே இந்தப்பதிவிற்கு “காமிக்ஸிம் சில common சிந்தனைகளும்” என்கிற காரணப்பெயர்.
என் பெயர் டைகர்:
“என் பெயர் டைகர்” - முன்பதிவிற்கு கீழே உள்ள Link-யை க்ளிக் செய்யவும்.
“என் பெயர் டைகர்” முன்பதிவிற்கு கிளிக் செய்யவும் |
ஆர்வமுடன் இந்த மாதத்து இதழ்களை புரட்டிக்கொண்டிருக்கும்போதே, கூடவே மனதும் சில விக்ஷயங்களைப்புரட்டிக்கொண்டிருந்தது. என்னதான் வயதாகியிருந்தாலும் காமிக்ஸ் கையில் வந்தவுடன் நடப்பு வயது காலாவதியாகி நம்மை இளம் பருவத்துக்கிட்டுச்செல்வது நம் காமிக்ஸ் காலர்களுக்கே வாய்க்கும் ஒன்று.ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை “எனக்கு மட்டும்தான் இப்படித்தோன்றுகிறதா. . . ?” என நான் நினைக்கும் விக்ஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.இதில் ஒன்றிரெண்டு அல்ல பல விக்ஷயங்கள் நீங்களும் நினைத்திருக்கலாம்-நிகழ்ந்திருக்கலாம், ஏனென்றால் நாம் அனைவரும் ‘காமிக்ஸ்’ என்ற ஒரே மழையின் கீழ் நனைந்துகொண்டிருக்கிறோம் அல்லவா.அதனாலே இந்தப்பதிவிற்கு “காமிக்ஸிம் சில common சிந்தனைகளும்” என்கிற காரணப்பெயர்.
- பொதுவாகவே பெண்கள் புத்தகம் படிப்பது குறைவு என்றாலும் ‘காமிக்ஸ்’ என்றவுடன் காத தூரம் ஓடுவது ஏன்? (வாழ்க்கையில் ‘துணைவியர்’ கதாபாத்திரம் ஏற்றவர்கள் காத தூரம் ஓடுவதில்லை என்றாலும், காமிக்ஸை கண்டவுடன் காதில் புகை வராத குறையாக கணவன்மார்களை முறைப்பது ஏனென்பது அனைவரும் அறிந்ததே).
- ராணி காமிக்ஸ் மாதமிருமுறை சரியாக கிடைப்பதெல்லாம் O.K தான், ஆனால் லயன் - முத்து காமிக்ஸ் போல கதையைப்பற்றிய ஆசிரியரின் எண்ணவோட்டத்தை அறியவும், திட்டமிடல்கள், காமிக்ஸ் விளம்பரங்கள் என புத்தகத்தை இன்னும் மெருகூட்டவும் முயற்சித்திருக்கலாம்.
- பழைய புத்தகக்கடைக்குச் சென்று காமிக்ஸ் தேடாத காமிக்ஸ் நண்பர்களும் உண்டா? (2000-க்கு முந்தைய காலகட்டத்தில் பழைய புத்தகக்கடைக்கு சென்றாலே கண்டிப்பாக காமிக்ஸ் கிடைக்கும்.தற்போதும் அதே நினைவில் சமீபத்தில் ஓரிரு கடைகளுக்கு சென்று காமிக்ஸ் என்று கேட்டதும் சிலர் மேலும்-கீழும் பார்ப்பதும்,பெருவாரியான பதில் ‘இப்பெல்லாம் காமிக்ஸ் வர்றதில்லீங்க’ என்பதும், அதிகபட்சமாக ‘Tinkle Digest' கிடைப்பதுமாக இருக்கிறது.)
- அந்நாட்களில் இரத்தப்படலம் (XIII) முழுத்தொகுப்பை ஒருமாதகால முயற்சியில் முழுவதும் படித்துமுடித்துவிட்டு கதை புரிகிறதா-புரியவில்லையா என எனக்கே புரியாமல் XIII-யைவிட அதிகம் குழம்பித்திரிந்தது நான் மட்டும் தானா? (பின்னாட்களில் மீள்வாசித்து கதையை சிலாகித்து நண்பர்களுக்கு புத்தகத்தை பரிசளித்து திரிந்தது தனிக்கதை).
- லயன்-முத்து காமிக்ஸின் புத்தகங்களில் வெளியாகும் மாதம்/ஆண்டு (Ex: நவம்பர் - 2015) குறிப்பிட்டால் பிற்காலத்தில் வரிசைப்படுத்துவதற்கு வசதியாக இருக்கும்.
- இன்னுமா இந்த சின்னபுள்ளைங்க படிக்கிற பொம்மை புக்கெல்லாம் படிக்கிற. . . ? இந்த கேள்வியை எதிர்கொள்ளாத நண்பர்கள் எத்தனை பேர்? (இந்தக்கேள்வியை எதிர்கொள்ளும்போதெல்லாம் கேட்பவர்கள் மீது கோபமும், காமிக்ஸின் ரசனையை அறிய இந்த ஜென்மத்தில் கடவுள் இவர்களுக்கொரு வாய்ப்பளிக்கவில்லையே என்ற வருத்தமும் ஒருசேர ஏற்படும். இதைப்பற்றி பேச ஆரம்பித்தால் இதற்கே தனிப்பதிவிட வேண்டிவரும்).
- ஒரு காலத்தில் நமக்கு மிகவும் பிடித்தது, பிடிக்காமல் போவதும் - பிடிக்காமல் இருப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகிப்போவதும் உலகத்தின் இயல்பு என்பதுபோல, விருப்பமான காமிக்ஸின் மீதிருந்த நேசம் விலகி புத்தகங்களை விற்றோ,நண்பர்களுக்கு கொடுத்துவிட்டோ அல்லது எடைக்கு போட்டுவிட்டோ அதற்காக தற்போது வருந்துவோர் எத்தனைபேர் . . . ?
- சிவகாசிக்கு சென்று ஆசிரியரை நேரில் சந்தித்து உரையாடிவிட்டு, காமிக்ஸிம் அள்ளிவர வேண்டும் என்று திட்டமிட்டு ஆயிற்று 8 ஆண்டுகள்.இவ்வாறு திட்டத்துடன் நிறுத்திக்கொண்டதும், செயல்படுத்தியதும் எத்தனை பேர்?
- காமிக்ஸ் டைம், ஹாட்லைன் படிப்பதற்காகவே பழைய வெளியீடுகளை தற்போதும் புரட்டிக்கொண்டிருக்கிறேன். காரணம் காமிக்ஸைப்பற்றி கலந்துரையாடுவதும், படிப்பதும், விவாதிப்பதும் ஒரு காமிக்ஸ் காதலனுக்கு என்றைக்குமே விருப்பமான விக்ஷயங்களே.
- என்னதான் பணம்,பட்ஜெட் என்று பல்லைக்கடித்தாலும் மாதம் 4 காமிக்ஸ் வந்தாலும், மனது இன்னும் வேண்டும் என்றுதான் கேட்கிறது.காசுக்கு என்றைக்குமே கலையை கட்டிப்படுத்தக்கூடிய ஆற்றல் இல்லைதான்.
- படிக்ககொடுத்த காமிக்ஸ் திரும்பி வரவில்லையே என்ற ஆதங்கத்தில் இனிமேல் காமிக்ஸ் இரவல் கொடுக்கக்கூடாது என்ற முடிவுடன் தூக்கம் தொலைத்தும், மறுநாளே மற்றொரு காமிக்ஸை இழந்த கொடுமையை என்னவென்று சொல்வது.
- காமிக்ஸ் திரும்பவும் வருதா? வண்ணத்தில் வருகிறதா? என்பவர்களிடம் காமிக்ஸ் வருவது பற்றியும், லயன் ஆபிஸ் முகவரி கொடுத்தும், online-னிலும் வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறிவிட்டு மகிழ்வது,மொழிதெரியாத ஊரில் ஒரு தமிழனைப்பார்த்துவிட்டு பரஸ்பரம் உதவிக்கொள்வதற்கு சமமானது.
- வரும்புத்தகங்களை எல்லாம் படிக்க முயற்சித்தாலும் வேலைப்பளுவின் காரணமாகவும்,நேரமிண்மையின் காரணமாகவும் வாசிக்காமல் கிடப்பில் இருப்பது ஒரு டஜனாவது தேரும்.
- சிந்தனைகள் தொடரும். . .