Saturday, March 11, 2017

இரத்தக்கோட்டை


நண்பர்களுக்கு வணக்கம், கேப்டன் டைகர் கதைவரிசையில் அதகள வெற்றியடைந்த “இரத்தக்கோட்டை” தொடரின் வண்ணமறுபதிப்பு பற்றிய அறிவிப்பின் பிரதிபலிப்பே இந்த பதிவு...!

   “இரத்தக்கோட்டை” 2004 -ம் ஆண்டு புத்தாண்டில் 5-பாகங்கள் கொண்ட இதழின் முதல் இதழ் வெளியானது.பின்னர் அதனைத்தொடர்ந்து மூன்று இதழ்கள் சில/பல மாத இடைவெளிகளில் வெளியாக இறுதிப்பாகம் மட்டும், மற்றொரு இதழின் இடைச்செருகளுக்கு பின்னர் வெளியானது.

  1. இரத்தக்கோட்டை _________(வெளியீடு நிர்:294).
  2. மேற்கே ஒரு மின்னல்_____ (வெளியீடு நிர்:295).
  3. தனியே ஒரு கழுகு________(வெளியீடு நிர்:296).
  4. மெக்ஸிகோ பயணம்____(வெளியீடு நிர்:297).
  5. செங்குருதிப்பாதை_____(வெளியீடு நிர்:299).



    கிட்டத்தட்ட  பதிமூன்றரை வருடங்களுக்கு பிறகு மறுபதிப்பு காணப்போகும் இதழிது.மாத மாதம் காத்திருந்து படிப்பது சிலருக்குப்பிடிக்கும், சிலருக்கு ஒட்டுமொத்தமாக படிப்பது பிடிக்கும்.நான் இரண்டாவது வகையைச்சேர்ந்தவன் என்பதாலோ என்னவோ எனக்கு 5-இதழ்களும் மொத்தமாகவே வாசிக்கக்கிடைத்தது.மாத மாதம் புத்தகம் வாங்காமல் புத்தக விழாக்களில் வாங்கத்தொடங்கிய நாட்களவை.வாங்கி வைத்த புத்தகங்களை படிக்கின்றோமோ இல்லையோ காமிக்ஸ்-டைம் / ஹாட்லைன் - யை முதலில் வாசித்துவிடுவது அந்நாளைய வழக்கம்.அது இன்றும் தொடர்கின்றது.பண்டலாக வாங்கிய புத்தகங்களைப்பிரித்து புத்தகங்களை ஒரு பார்வையிட்ட பின்னர் காமிக்ஸ்-டைம் படித்த  பின்னர்தான் தெரிந்தது டெக்ஸ் உட்பட நிறைய புத்தகங்கள் ரூ.10/- விலையில் பிரிக்கப்பட்டு, இரண்டு,மூன்று அல்லது இரத்தக்கோட்டை போன்று 5 பாகங்களாக வெளிவந்துள்ளதென்று.முத்து காமிக்சின் வரலாற்றில் முதன்முதலில் இரண்டு பாகங்களாக பிரித்து வெளிவந்த ”தங்கக்கல்லறை” மூலம் அதற்கான சிறப்பும் திருவாளர் டைகரை சென்றடைகின்றது.ஒட்டுமொத்தமாக முழுக்கதையையும் வாசித்தவர்களாகட்டும் அல்லது காத்திருந்து ஒவ்வொரு பாகங்களாக வாசித்தவர்களாகட்டும்,மேலும் ஓரிரு பாகங்கள் கிடைக்கப்பெற்று இன்னபிற பாகங்களை தேடிக்கொண்டிருப்பவர்களாகட்டும், இவையெதிலும் சேராமல் இத்தொகுப்பை புதிதாக வாசிக்க காத்திருப்பவர்களாகட்டும் அனைவருக்கும் ஒரு அருமையான சித்திர விருந்து காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
   இந்த அறிவிப்பைக்கொண்டாடும் வகையிலும்,நம் நண்பர்களுக்கான சகாயமாகவும் “Tamil Comic Series" சார்பாக ஒரு சிறிய அன்பளிப்பை அளிக்க முன்வந்துள்ளோம்.நீங்கள் செய்ய வேண்டியது இப்பதிவிற்கான ஒரு "COMMENT" இட வேண்டியதே.என்ன Comment இடலாம் என தீவிர யோசனை தேவையில்லை. “RESERVED FOR BLUEBERRY" என்பதைக்கூட தாங்கள் உபயோகிக்கலாம். பின்னூட்டமிட்டுள்ள அனைவரது பெயரும் தொகுக்கப்பட்டு  குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசு எந்த ஊராக-நாடாக இருந்தாலும் குரியரில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.பரிசை பெரும் நபரது புகைப்படம் / பரிசுடன் (நபரின் விருப்பம் மற்றும் அனுமதியைப்பொறுத்து) மேற்கொண்ட நமது பதிவுகளில் வெளியாகும்.ஏப்ரல் 30,2017 இரவு 12:00 மணி வரை வரும் "COMMENT"-கள் மாத்திரமே இப்பரிசிற்கு தகுதியானவைகளாக ஏற்றுக்கொள்ளப்படும். மே 01,2017 மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.நேரம் கிடைப்பின்  குலுக்களின் வீடியோ பதிவு நமது தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.கடைசி வரைக்கும் அந்த பரிசு என்னனு சொல்லவே இல்லையே என்ற நண்பர்களின் Mind Voice-கேட்காமல் இல்லை. வெற்றிபெரும் ஒரு நபருக்கு இரத்தக்கோட்டை  மேற்கானும் 5-இதழ்கள் கொண்ட செட் அனுப்பி வைக்கப்படும்.மேலும் ஒரு புதிய பதிவுடன் நண்பர்களைச்சந்திக்கும் வரை...! Have a lot fun with COMICS...!

பின்குறிப்பு: ஏற்கனவே புத்தகம் வைத்திருக்கும் நபர்கள். COMMENT-னைத்தவிர்த்து புத்தகம் இல்லாதவர்கள் பயன்பெற வழியமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

67 comments:

  1. Blue berry அறிவிப்பு வந்தவுடனே உடன் பதிவா கலக்குங்க

    ReplyDelete
    Replies
    1. ஏதோ நம்மாலான சிறிய முயற்சிதான் ஜி! இன்று மட்டும் கிட்டத்தட்ட ஒரு 6 நண்பர்கள் என்னைத்தொடர்பு கொண்டு (பழைய காமிக்ஸ் வாசகர்கள் / புதிய காமிக்ஸ் வாசகர்கள்) நமது காமிக்ஸ்கள் பற்றி விசாரித்தார்கள்.அவர்களுக்கு BLOG முகவரியும்,நமது காமிக்ஸ் தொடர்ந்து வருவது பற்றியும் தகவல்கள் கூறினேன், நிறைவான நாள்...!

      Delete
  2. இன்னும விரிவாக நிறைய விடயங்களை எழுதவும்...நல்ல முயற்சி..!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் விரிவாக எழுதவும், பகிர்ந்துகொள்ளவும் ஆசைதான். நேரமின்மைதான் குறுக்கே நிற்கின்றது...!போட்டியில் கலந்து கொண்டதற்கும், வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்...

      Delete
  3. Intha naanum vanthutan iratha koaataila 2 parts missing nu thedidu irukan mothama vasika august Ku idaila black and white LA vasikanumdu oru sinna aasa kidacha santhosama irukum reserved for caption tiger

    ReplyDelete
  4. Nalla muyartchi nanbare.. Me also participate this lucky draw.. Reserved for blueberry..

    ReplyDelete
  5. Reserved for blueberry....
    Welcome your context....

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள். சகோ....!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ... போட்டியில் கலந்து கொண்டதற்கும், வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்...

      Delete
  7. நண்பரே, தங்கக்கல்லரை படித்ததிலிருந்து நான் டைகரோட பெரிய ரசிகனாகிடேன். மின்னும் மரணம் பத்தி என்ன சொல்றதுனே தெரியல. கடந்த 4 வருசமாதான் காமிக்ஸ் படிக்கிறேன். இந்த இரத்தக் கோட்டையையும் இப்பதான் முதல் முரை படிக்கப்பேகிறேன். iam waiting..
    http://thecinima.blogspot.in/search/label/comics

    ReplyDelete
    Replies
    1. போட்டியில் கலந்து கொண்டதற்கும், வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்...

      Delete
  8. Replies
    1. Thanku you bro,Thanks for the Participation...

      Delete
  9. Welcome,But Unknown ID's not eligible for the participation. Atleast show your Name & where you from. That's enough.

    ReplyDelete
  10. சார்! ரத்த கோட்டை புத்தகங்கள் என்னிடம் உள்ளன.இங்கு வந்தது உங்கள் உயர்வான எண்ணத்தை வாழ்த்தவே! வாழ்த்துகளும் பாராட்டுகளும் சார்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... தமிழ் பேசும் சித்திரக்கதை உலகம் மென்மேலும் வாழ-வளர ஏதோ என்னாலான சிறிய முயற்சி. தங்களைப்போன்ற நண்பர்களால்தான் அதற்கு உற்சாகமும்,உத்வேகமும் கிடைக்கின்றது.

      Delete
  11. Really a lovable attempt.. Sir.. Keep rocking..

    ReplyDelete
    Replies
    1. Thank you sir, thank for the participation...!

      Delete
  12. நேத்திக்கே இந்தப் பக்கம் வந்தேன். ஆனா நீங்க //ஏற்கனவே புத்தகம் வைத்திருக்கும் நபர்கள். COMMENT-னைத்தவிர்த்து புத்தகம் இல்லாதவர்கள் பயன்பெற வழியமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்// - அப்படீன்னு சொன்னதால திரும்பிப் போய்ட்டேன்!

    ஆனாலும் உங்க முயற்சியப் பாராட்டாம இருக்க முடியலை. வாழ்த்துகளும் நன்றிகளும்!

    **** இரத்தக் கோட்டை என்னிடமும் இருப்பதால், நோ போட்டிக்காண்டி *****

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... நமது பதிவின் மூலம் மாதத்திற்கு ஒரு நபராவது நம் சித்திரக்கதை உலகினுள் நுழைந்தாலோ அல்லது நமது காமிக்ஸுடன் தொடர்பற்ற நிலையில் இருக்கும் பழைய வாசகர்களுக்கு நமது புதிய வண்ண அவதார விக்ஷயம் எட்டினாலோ அதுவே நமது உண்மையான வெற்றி.தங்களைப்போன்றவர்கள் ஆதரவு இருக்கும் வரை தமிழ் பேசும் சித்திரக்கதை உலகம் தழைத்தோங்கும்...!

      Delete
  13. Reserved for blueberry..
    Good Initiative bro...

    ReplyDelete
  14. There are lot of hot topics are surrounding about comics , so Next article eppo bro ,

    ReplyDelete
    Replies
    1. Yes i also noticed... Next article will be soon...

      Delete
  15. Replies
    1. Welcome,But Unknown ID's not eligible for the participation. Atleast show your Name & where you from. That's enough.

      Delete
  16. Good Initiative. I already reserved.

    ReplyDelete
  17. Jiநாளைக்கு ஏப்ரல் 30 ... முன்னாடியே எதிர் பாக்க வச்சுட்டீங்க.. ஹி ஹி..

    ReplyDelete
  18. Ji what about the result ? Late fees aa comment Potts ellarukkum 2 comics book koduthudunga !!!

    ReplyDelete