Saturday, February 25, 2017

“காமிக்ஸ்” எனும் காலயந்திரம்

      நண்பர்களுக்கு வணக்கம், மீண்டுமொரு பதிவுடன் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...! “காமிக்ஸ்” எனும் ஒற்றை வார்த்தையின் பலம் நாம் அறியாததில்லை.சித்திரக்கதைகளின் மீதான மையல் உச்சத்திலிருந்த காலகட்டமான எண்பதுகளில் ( - 1980’s +) பிறந்து, சித்திரக்கதையுடனே வளரும் வாய்ப்பை நமக்களித்த இறைவனுக்கு நன்றிகள்.இந்த ஒற்றை வார்த்தைக்குள்தான் எத்தனை எத்தனை நினைவுச்சுழல்கள்.வெறும் நினைவுகளுக்காகவே தற்போதைய மறுபதிப்புகளை(இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஸ்பைடர், ஜானி நீரோ-ஸ்டெல்லா) வாங்கும் நண்பர்கள் ஏராளம்.இன்னும் சொல்லப்போனால் நம் பால்யத்தை மீட்டெடுக்க நமக்கு கிடைத்திருப்பது காமிக்ஸ் எனும்  காலயந்திரமே.

சித்திரக்கதை (comics):
  காமிக்ஸ் - என்ற வார்த்தையை கேட்டவுடன் பெரும்பாலான நண்பர்கள் மனதில் அன்றும் இன்றும் என்ன மாதிரியான எண்ணவோட்டமிருக்கும் என சில நேரங்கலில் நினைப்பதுண்டு,அதன் விளைவே இந்த எண்ணச்சிதறல்கள்.

அன்றைய நினைவுகள்:
 1. பால்யத்தில் காமிக்ஸ் படித்த நினைவுகள்.
 2. பாக்கெட் சைஸ் புத்தகம்.
 3. அழிவு, கொள்ளை, தீமை கழகம்.
 4. ரூ.60 /- காசு புத்தகம் வாங்குவதெற்கே கக்ஷ்டப்பட்டு காசுசேர்ப்பது.(வீட்டின் சேமிப்பு உண்டியலில் கைவைத்து குட்டு வாங்கியது தனிக்கதை......!).
 5. கையில் போதிய காசு இல்லாமல் புத்தகங்களை  ஏக்கத்தோடு கடந்து சென்றது(என்னவொரு கொடுமை...!).
 6. புத்தகத்தை பரிமாற்றத்திற்கு கொடுத்துவிட்டு திரும்பப்பெற நண்பர்களிடம் சண்டையிட்டது என இழந்ததும்,பெற்றதும் சில-பல நட்புகளை.
 7. அந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் புத்தகம் வராது என்பது உலகமறிந்த விஷயம். மாதம் பிறந்து பத்து நாட்கள் தாமதமாக கடைக்கு சென்றாலும் புத்தகம் வந்திருக்காது.ஒன்று வழக்கத்தைவிட கூடுதல் தாமதம் அல்லது உள்ளூர் ஏஜெண்ட்டின் கைவண்ணம் என நாலைந்துமுறை படையெடுப்பின் பின்னரே புத்தகம் கையில் கிடைக்கும். அந்த மகிழ்ச்சியான தருணங்களை எளிதில் வார்த்தைகளில் வடித்துவிட இயலாது.
 8. கடைகளில் லயன், முத்து மற்றும் ராணி காமிக்ஸ் தவிர்த்தும் ஏகப்பட்ட நிறுவனங்களின் புத்தகங்கள் இருக்கும்.வாங்குவதற்குத்தான் பணம் இருக்காது.அதை இப்போது நினைத்தாலும் வருத்தமாகவும், தற்போது அவ்வாறு இல்லையே என்ற ஏக்கமும் மிகும்.(பொன்னி காமிக்ஸ், மாலைமதி காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ், டால்பின் காமிக்ஸ், பார்வதி சித்திரக்கதைகள், கண்மணி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், காமிக் வேர்ல்ட், தேசமலர் காமிக்ஸ், தினபூமி காமிக்ஸ், பூவிழி காமிக்ஸ்... Etc...).
 9. அந்த வயதில் ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் காமிக்ஸ் என்ற ஒரே காரணத்திற்காக கிடைக்கும் Tin Tin, Archie, Asterix's  என எல்லா புத்தகங்களையும் வாங்கி சேர்த்தது.
 10. வகுப்பறையில் புத்தகம் படித்து ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு புத்தகத்தை பறிகொடுத்தது மட்டுமல்லாமல் வாங்கியும் கட்டிக்கொண்டது.புத்தகம் கூட நினைவில் உள்ளது பாம்புத்தீவு & கடத்தல் குமிழிகள் இணைந்த Comics Classic's புத்தகம் அது.பின்னாட்களில் அந்த ஆசிரியரும் தீவிர காமிக்ஸ் ரசிகராகிவிட்டார் என்பது என்னிடமிருந்து வசிக்க வாங்கிய மேலும் சில புத்தகங்களை லவட்டிய பிறகே தெரியவந்தது.
 11. பழைய புத்தககடையில் பெட்டி பெட்டியாக காமிக்ஸ் கிடைக்கப்பெருவது பெரும்பாலான நண்பர்களுக்கு  கனவிலும், வெகுசிலருக்கு நினைவிலும் வாய்த்திருக்கும்.இக்கணவு காமிக்ஸ் ரசனையும், காதலும் கொண்ட அனைவருக்கும் பொதுவானது.
 12. அன்றைய ரூ.5/-, ரூ.7/- விலைகளுக்கே, விலை அதிகம் என்று கடிதம் எழுதி ஆசிரியரை கலங்கடித்ததும். ஸ்பெஷல் இதழ்களின் அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், என்ன...? விலை 15/- ரூபாயா என்று விழிபிதுங்கியதும் மறுக்க-மறக்க இயலுமா..?
 13. சேர்த்த புத்தகங்களை மொத்தமாக அடுக்கிவைத்து அழகுபார்த்ததோடு நில்லாமல் அதற்கென ஒரு புத்தக அட்டவணை போட்டு பராமரித்த வயதும்தான் திரும்புமோ...!
 14. பாட புத்தகங்களை பராமரிக்கிறோமோ இல்லையோ காமிக்ஸ் புத்தகங்களுக்கு பைண்டிங் செய்தது ஒரு காலம்.
 15. கல்லூரி அல்லது வேலை விசயமாக வெளியூர் சென்று திரும்பும்போது நமது காமிக்ஸ் பெட்டி காணாமல் போயிருக்கும். ஒன்று நண்பர்களின் கைங்கர்யம் அல்லது பெற்றோரின் உபயத்துடன் பழைய புத்தகக்கடை.
 16. அப்பாவிடம் புத்தகம் வாங்கிவரச்சொல்லிவிட்டு அவர் வரவை எதிபார்த்துக்கொண்டு வாசலில் காத்திருப்பதென ரசனையான நாட்கள் ஏராளம்.
இன்றைய நடைமுறை:
 1. மாதந்தோறும் நான்கு காமிக்ஸ்.படிக்கத்தான் நேரமிருப்பதில்லை.(இருந்தாலும் நாங்கெல்லாம் "COMICS" என்று போட்டிருந்தாலே புத்தகம் வாங்குற ஆளுக...!)
 2. உடனுக்குடன் புத்தகங்களைப்பற்றிய கருத்துப்பரிமாற்றம் (அட்டைப்படம் முதல் கதை,ஓவியம்,மொழிபெயர்ப்பு என அனைத்தையும் அலசி ஆராய்ந்து விடுதல்).
 3. முன்னெல்லாம் புத்தகம் நம் கையில் கிடைக்கும் வரை அட்டைப்படத்தைக்கூட பார்க்க முடியாது,ஆனால் தற்போது புத்தகம் நமக்கு கிடைக்கும் முன்னரே ஹாட்லைன் முதல் கதையின்  “கரு”வரை  Whatsup Group-களிலும், Facebook page-களிலும் பகிரப்படுவதால், புத்தகம் கைக்கு வரும்போதே பாதி சுவாரஸ்யம் குறைந்து விடுகின்றது.
 4. தற்போது “காமிக்ஸ்” என்பது அதன் இயல்பையும் தாண்டி நல்ல பல நண்பர்களை அடையாளம் காட்டியும்,உருவாக்கியும், பழைய நண்பர்களை  இணைத்தும் மனிதம் வளர்த்து வருகின்றது.இது சற்று மிகைப்படுத்தலாகத்தோன்றினாலும் அதுவே உண்மை.
 5.  “கருப்புச்சந்தை” - யில் பணம் பண்ணக்கூடிய அளவிற்கு நமது தமிழ் காமிக்ஸ்-ன்  வளர்ச்சி அதிகரித்திருக்கிறது.
 6. நண்பர்களிடையேயான புத்தக பரிமாற்றத்தின் மூலம் வாசிக்க கிடைக்காத புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் ஒரு ஆரோக்யமான சூழல் எழுந்துள்ளது.
 7.  கதைக்காக பழைய புத்தகங்களை தேடுபவர்களை விட, சிறுவயதில் தான் வாசித்த புத்தகம்  திரும்ப கிடைத்து விடாத என தேடும் நண்பர்கள் ஏராளம்.
 8. இணையத்தின் மூலம் வாசக நண்பர்களின் கருத்துக்கள் உடனுக்குடன் நேரடியாக ஆசிரியரையும், காமிக்ஸ் ஆர்வலர்களையும் சென்றடைகிறது.
 9. காமிக்ஸ்-க்காக செலவிடும் தொகையை வீட்டிற்கு சொல்லாமல் இருக்கும் நண்பர்களும், வீட்டிற்கு தெரிந்தே அனைத்து புத்தகங்களிலும் இரண்டு செட் வாங்கும் நண்பர்களும் நம்மிடம் உண்டு (குண்டு புத்தகங்கள் உட்பட இரண்டு செட்கள்).
 10. வெரும் கலக்க்ஷனுக்காக வாங்குவோரும்,இரவல் வாங்கிப்படித்து தீவிர வாசகரானவரும்(சமீப காலத்தில்) நம்மிடையே உண்டு.
இன்னும் எழுத ஏராளமான விக்ஷயங்கள் இருந்தாலும், நண்பர்கள் தங்கள் பால்யத்திற்கு செல்ல காலயந்திரத்தை கொடுத்துவிட்டு - தற்போதைக்கு இப்பதிவிற்கு ஒரு விடைகொடுத்து என் நிகழ்கால கெளபாய் நண்பர்களுடன் வன்மேற்கின் நீதியை மீட்டெடுக்க விரைகிறேன்.

சூப்பர் - 6:
இந்த வருடம் ரெகுலர் சந்தாவினை தவிர்த்து, மேற்கொண்டு ஆறு இதழ்கள் சூப்பர்-6 எனும் அட்டவணையின்கீழ் வெளியாகின்றது.சூப்பர் - 6 Online-ல் Book செய்திட இங்கே க்ளிக் செய்யவும்.
 1. லக்கி லூக் (ஜெஸ்ஸி ஜேம்ஸ் & ஒரு கோச் வண்டியின் கதை).
 2. மாடஸ்டி பிளைஸி (கழுகுமலைக்கோட்டை).
 3. டெக்ஸ் வில்லர் (டிராகன் நகரம்).
 4. ஜெராமையா (அறிமுகம்).
 5. சிக்பில்.
 6. கேப்டன் பிரின்ஸ் 
சூப்பர் - 6 வரிசையில் வெளியான முதல் இதழ் “லக்கி-Classics"

காலத்தைகடந்து நிற்கும் க்ளாஸிக் வரிசையில் இப்புத்தகங்கள் குறிப்பிடத்தகுந்தவை.மீண்டுமொரு புதிய பதிவுடன் நண்பர்களை சந்திக்கும் வரை Have a lot fun with Comics...!

19 comments:

 1. அருமை தொடரவும் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...உங்கள் ஆதரவும் ஊக்கமும் இருந்தால் கண்டிப்பாக தொடரலாம் நண்பரே...

   Delete
 2. பட்டவர்த்தனமாக யதார்த்த பதிவு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... யதார்த்தமே நடைமுறை இயல்பு.

   Delete
 3. 16 . என் மனதில் மாதம் பிறந்ததும் பூந்தளிர் ராணி காமிக்ஸ் அம்புலிமாமா முத்து லயன்காமிக்ஸ் இவைகளுக்காக நானும் என் அக்காவும் வீட்டு வாசற்படியில் அப்பிச்சியை எதிர் நோக்கி தவம் கிடந்த நாட்களை மறக்க முடியுமா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... என்றைக்குமே மறக்க இயலாத நினைவுகளவை.

   Delete
 4. பால்யத்தையும், தறுபோதைய சூழலையும் ஒப்பிட்டுப் பார்க்க வைத்திடும் அருமையான பதிவு!

  சிறுவயதில் நம்மிடமிருந்த எத்தனையோ பழக்கங்கள் காலப்போக்கில் மாறி/மறைந்துவிட்டாலும் காமிக்ஸ் மட்டும் இன்றும் தொடர்வது ஆச்சரியமே!

  ////தற்போது “காமிக்ஸ்” என்பது அதன் இயல்பையும் தாண்டி நல்ல பல நண்பர்களை அடையாளம் காட்டியும்,உருவாக்கியும், பழைய நண்பர்களை இணைத்தும் மனிதம் வளர்த்து வருகின்றது.இது சற்று மிகைப்படுத்தலாகத்தோன்றினாலும் அதுவே உண்மை.////

  உண்மை உண்மை!

  ReplyDelete
  Replies
  1. தற்போதைய சூழலில் நம் ரசனையொத்த நண்பர்கள் கிடைப்பது அரிது,அதனை ஈடு செய்யும் பாலாமாக சித்திரக்கதைகள் இருப்பது யதார்த்தமான உண்மை...

   Delete
 5. //தற்போது “காமிக்ஸ்” என்பது அதன் இயல்பையும் தாண்டி நல்ல பல நண்பர்களை அடையாளம் காட்டியும்,உருவாக்கியும், பழைய நண்பர்களை இணைத்தும் மனிதம் வளர்த்து வருகின்றது //
  அருமையாகச் கூறினீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே...

   Delete
 6. Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே...

   Delete
 7. அழகான தெளிவான உண்மையான பதிவு...:-)

  வாழ்த்துக்கள் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே... தங்களின் ஆதரவே மேலும் எழுதத் தூண்டுகிறது...!

   Delete
 8. ஆழமான நடை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே...

   Delete