Saturday, August 5, 2017

பெல்ஜியம் to ஈரோடு...! (ஒரு மினி பயணம் & பதிவு)

நண்பர்களுக்கு வணக்கம்,
ஒருவழியாக “இரத்தக்கோட்டை”யும் வெளிவந்துவிட்டது (அன்பளிப்பாக அறிவித்த “இரத்தக்கோட்டை” புத்தகம் எங்கே என்கிற நண்பர்களின் கேள்விகள் என் செவிகளை எட்டாமலில்லை, இந்த வார இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு உண்டாகும்.) ஈரோட்டில் நண்பர்கள்-ஆசிரியர் சந்திப்பு இனிதே நடைபெற்றது என்பதை அறியப்பெற்றோம்.இரத்தப்படலம், டெக்ஸ் வில்லர் ஒருசில மறுபதிப்புகள் பற்றிய அறிவிப்புகள் என விழா சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது.இருந்தாலும் “வேதாளர்” பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லையே என்கிறதொரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு பெல்ஜிய காமிக்ஸ் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்நாட்டில் இப்படிப்பட்டதொரு  ஏகபோக ரசிகர்பட்டாளம் இருக்குமென்பதை அதன் படைப்பாளிகளே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்நேரத்தில் “என் பெயர் டைகர்’’  இதழுக்காக நான் முயற்சித்த அட்டையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


இரத்தக்கோட்டையை பற்றிய ஆசிரியரின் கருத்துடன் இப்பதிவை நிறைவு செய்கிறேன் கதையைப் பொறுத்தவரை - உங்களில் அநேகப் பேர் இதனை மனப்பாடமாக ஒப்பிக்கக் கூடியவர்கள் என்பதால் நான் பில்டப் என்று மொக்கை போடப் போவதில்லை ! மாறாய் - வண்ணத்தில், இந்த பெரிய சைசில் - உங்களின் ஆதர்ஷ நாயகரை ரசிக்கும் அனுபவத்தை இயன்றமட்டுக்கு நம்மோடு பகிர்ந்து கொள்ள மட்டுமே கோரிடுவேன் ! இந்த சாகசத்துக்குமே ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணியுள்ளது என்பதை மட்டுமே நீங்கள் புதிதாய்த் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்பேன் !

இந்த மெகா சாகசத்தை முதன்முறையாக ரசிக்கவிருக்கும் நண்பர்கள் நிச்சயமாய் மச்சக்காரர்களே ! அன்றைக்கு நியூஸ் பிரிண்டில் - கச்சா முச்சா என்ற frame அமைப்புகளில், கருப்பு-வெள்ளையில், பிரித்துப் பிரித்து நாங்களெல்லாம் ரசித்ததை இன்று நீங்கள் அழகாய், தரமாய், 'ஏக் தம்மில்' வாசிக்கப் போவது நிச்சயமாய் ஒரு அதிர்ஷ்ட அனுபவம் என்பேன் ! Happy Reading  guys !!”இதழைப்பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுவொரு மினி-பதிவே, சுவாரஸ்யத்துடன் மேலும் சில தகவல்களை சுமந்து வரும் அடுத்த பதிவுடன் நண்பர்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன். அதுவரை Happy Reading Folks...!.

14 comments:

  1. Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

      Delete
  2. சிறப்பு ஜி ��

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி கலீல் ஜி...

      Delete
  3. We expect regular articles from you, write lengthy articles because i like to read about comics,

    ReplyDelete
    Replies
    1. Thanks for the visit and opinion bro... I too try . I know you are a die hard fan of comic & related topics.

      Delete
  4. அநேகமாக தோட்டா நகரம் மறுபதிப்பிற்கு பிறகு கேப்டன் டைகர் அலை ஓய்ந்துவிடும் என கருதுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... எனக்கு அப்படி தோன்றவில்லை நண்பரே...அலைகள் என்றைக்குமே ஓய்வதில்லை என்ற மெய்யை அதிகம் நம்புபவன் நான்...!

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. என்ன சம்பத் ஜி... ஏதோ சொல்ல முயன்று அமைதியாகி விட்டீர்கள்.உங்களுக்கு கொஞ்சம் புத்தகங்கள் கொடுக்க வேண்டி இருக்கின்றது,விரைவில் தொடர்பு கொள்கிறேன்...

      Delete
  6. சிறு பதிவு என்றாலும் சும்மா நச்சு ன்னு இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே... உங்களைப்போன்றவர்களின் நட்பு மூலமே இந்த வலைப்பூ இன்னும் உயிர்ப்புடன் மணம் வீசிக்கொண்டிருக்கிறது...

      Delete
  7. Nice doc ge.. This book is awesome

    ReplyDelete