Saturday, February 4, 2017

“இரத்தப்படலம்” மறக்கவியலா நினைவுகளும் - நினைவாகும் கனவுகளும்:

நண்பர்களுக்கு வணக்கம்.மிக நீண்டதொரு இடைவெளிக்கு பின்னர் ஒரு புதிய பதிவுடன் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி (Saturday, February 27, 2016 - வேதாளர் - நினைவில் நீந்தும் கனவுகள்). கண்மூடித்திறப்பதற்குள் பத்து மாதகாலங்கள் ஓடிவிட்டன.இடைப்பட்ட காலத்திலான நிகழ்வுகள் ஏதோ ஒரு யுகத்திற்கு முந்தையிலான நினைவுகளாக மட்டும் தோன்றுவது ஏனோ…! கடந்த பதினோரு மாதங்களில் பலவித சித்திரக்கதைகளின் மாயத்தில் கட்டுண்டு வருட தொடக்கத்தை தாங்கி நிற்கும் பனிபடர்ந்த பிப்ரவரியின் பொழுதுகளில் நின்றுகொண்டு, இந்த 2017-ம்  ஆண்டின் சித்திரப்புதையல்களுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு சராசரி காமிக்ஸ் ரசிகனுக்குமானது இந்த பதிவு. “தாமதப்பேய்” வரலாறாகிப்போனதும், ”மும்மூர்த்திகளின் மறுபதிப்பு வேண்டும்” என்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதும், நான்கு ஆண்டுகளின் மொத்த இதழ் எண்ணிக்கை நாற்பதைத்தாண்டுமா? என்ற நிலை மாறி தற்போது ஆண்டுக்கு 46 இதழ்கள் என்றாகிப்போனதும்,ஆங்கில வண்ண இதழ்களைப்பார்த்து பெருமூச்சு விட்ட காலம் போய், நம் இதழ்களின் தரத்தைப்பார்த்து மூச்சுவிட மறந்தகாலமும் தற்போது நடந்துகொண்டிருக்கும் ஓன்று.முதலில் அதற்காகவும் - கடந்த ஆண்டைப்போலவும், வரும் ஆண்டு அதற்கு மேலும் சிறக்கவும் லயன் - முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்களும்,வணக்கங்களும் சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.இவ்வாறான தருணத்தில்தான் இரத்தப்படலம் வண்ணமறுபதிப்பு பற்றிய அறிவிப்பு.   இரண்டாவதாக ஒரு வாசகனாக புத்தகத்தரத்தைப்பற்றியும்,நமது வாசகர் வட்டத்திற்காக ஆசிரியர் பக்கத்திலிருந்து அவர் செய்ய வேண்டிய சிற்சில சகாயங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.(*இது எனது தனிப்பட்ட கருத்துக்களே).

"இரத்தப்படலம்" வண்ண மறுபதிப்பு - ஒரு பொதுப்பார்வை ( 2018)


 இரத்தப்படலம்....! தமிழ் காமிக்ஸ் ரசிகனுக்கு பழகிவிட்டதொரு வார்த்தை.மறதியையே துணைவனாகக்கொண்டு திரியும் நம் நாயகன் - XIII’யே மறந்தாலும் காமிக்ஸ் ரசிகர்கள் மறக்க இயலாத காவியம்.தான் யார் எனத்தேடும் XIII-யை விட, லயன் காமிக்ஸ் வெளியிட்ட “இரத்தப்படலம் - The Complete Collection" ஐ தேடும் / தேடிய / தேடிக்கொண்டிருக்கும் காமிக்ஸ் ரசிகர்கள்தான் அதிகம்.அதில் நானும் ஒருவன்.கிட்டத்தட்ட காமிக்ஸ் எனும் ரசனையை விட்டு(பார்க்க:காமிக்ஸ் - ஒரு முடிவில்லா தேடல்) வெகுதொலைவில் விலகி  நின்ற காலகட்டத்தில் வெளியாகி பின்னாட்களில் அனைவரது கனவு இதழாக வலம் வந்து கொண்டிருக்கும் “இரத்தப் படலம்” எனது கைகளில் கிடைக்கப்பெற்றது 2011-ம் ஆண்டின் சென்னை புத்தகத்திருவிழாவின் போதே...! 
 இப்புத்தகத்தின் முகப்பட்டையை பார்த்ததே Youtube-ல் திரு.எஸ்.ராமகிருக்ஷ்ணன் அவர்களின் நூல் அறிமுகத்தின்போதுதான்.பார்த்தவுடனே வசீகரிக்கும் தன்மையுடன் “இந்திய காமிக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு 858-பக்க காமிக்ஸ் ஆல்பம்” என்ற கம்பீரமான அடைமொழியோடு வெளிவந்திருந்த அந்த இதழை உடனே வாங்கிப்படிக்கவேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொண்டது.கூடவே இரத்தப்படலம் 06,07,08,09 போன்ற இடைப்பட்ட பாகங்களை வாசித்திருப்பதால் அதன் பாதிப்பும் சேர்த்து எதிர்பார்ப்பை எகிர வைத்தது.மேலும் நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு புத்தகத்தேடலின் மூலம் வாசித்த மாடஸ்டியின் “காட்டேரிக் கானகம்” காமிக்ஸ் காதல் மீதான நேசத்தை உயிர்ப்பிக்க, அதே தருணத்தில் சென்னை புத்தகத்திருவிழாவில் நமது காமிக்ஸ் விற்பனைபடுத்தப்பட்டுள்ளது என தெரியவர பொறுத்தது போதுமென்று அன்றைக்கே ஸ்டாலில் ஆஜராகிவிட்டேன்.அன்றைக்கு நமது ஸ்டாலில் நான் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை.வழக்கமாக  நம்  புத்தகங்களின் விலை ரூ.4/-, ரூ.5/-,ரூ.6/-, ரூ.7.50/- என மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.ஆனால் அவ்வாறில்லாமல், ரூ.10/- என நிர்ணயிக்கப்பட்ட விலையுடன் சற்று கடினமான அட்டையுடன் புதுப்பொலிவு பெற்றிருந்தது. புத்தகங்கள் லயன்+முத்து காமிக்ஸ் என பண்டலாக விற்பனை செய்யப்பட்டது.பெரும்பாலான புத்தகங்கள் (இரத்தப்படலம் உட்பட) விற்றுத்தீர்ந்தன.2012-ம் வருடம் ஜனவரியில் “லயன்  Comeback ஸ்பெக்ஷல்”-லுடன் கூடிய மறுவருகைக்கு இந்த புத்தகவிழாவும் ஒரு காரணமென்றே கூறலாம்.சற்றும் யோசிக்காமல் எனக்கும்,நண்பருக்குமாக இரண்டு செட் புத்தகங்கள் வாங்கினேன்.முகமறியா நண்பர்களுடன் கைகுலுக்கி,உரையாடி..., சித்திரக்கதை நேசர்களின் களிப்புணர்ந்து களிப்புற்றதும் அந்நாளே.கையில் கிடைத்த புத்தகத்தை விடாப்பிடியாக வாசித்து முடித்தது தனிக்கதை.இப்படியாக ஒவ்வொரு புத்தகத்திற்கும் சொல்வதற்கு ஒரு தனிக்கதை வைத்திருப்பான் சித்திரக்கதை பிரியன்.

இரத்தப்படலம் - The Complete Collection:
 ஆசிரியர், இரத்தப்படலம் வண்ண மறுபதிப்பை அறிவுத்தவுடன் வாசகர்கள் மத்தியில் பல்வேறுவிதமான கருத்துக்கள் லயன்'Blog-லும்,Whatsup Group-களிலும்,முகப்புத்தகங்களிலும் நிலவியது அனைவரும் அறிந்த ஒன்றே.இறுதியில் ஆசிரியர் தீர்க்கமாக இறுதி முடிவைக்கூறினார்.

6 ஆல்பம்பங்கள்- ஒவ்வொன்றிலும் 3 கதைகள் என்ற அமைப்பில்!
         
ஒரே ராட்சஸ ஆல்பம் – 18 பாகங்களையும் இணைத்துக் கொண்டு!


இனி வாசகர்களாகிய நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.ஆசிரியரைப்பொருத்தவரை Printing-ஒன்றுதான், பைண்டிங் மட்டுமே இறுதரப்பட்டது.தீவிர காமிக்ஸ் காதலர்களைப்பொருத்தவரை கலெக்க்ஷனுக்காக இரண்டையுமே வாங்க வேண்டிய கட்டாயம்(பட்ஜெட்டில் துண்டு நிச்சயம் உண்டு).ஆனால் இப்புத்தகம் வெளியாகும்போது பெரும் வரவேற்பை பெறப்போவது உறுதி.
 • புத்தகத்தின் தரத்தில் எந்தவிதமான Compromise-யும்  வேண்டாம்.(கார்ஸனின் கடந்த காலத்தைப்போல).
 • இரண்டு செட்களும் வாங்குபர்களுக்கு ஏதேனும் சிறப்பு சலுகை அளிக்கலாம்.
 • பைண்டிங்கில் கூடுதல் கவனம் தேவை.(தற்சமயம் வெளியான ட்யுராங்கோ, லக்கி Classics இரண்டுமே சிறப்பான தரத்தில் வெளிவந்திருந்தன).
 • வரும் காலங்களில் வண்ணத்தில் வெளியாகும் புத்தகங்களை வண்ணத்திலே வெளியிடலாம்.(வண்ணத்திற்காக மறுபதிப்பு கோரிக்கை எழாமல் இருக்கவும்,அந்த Slot-களில் வேறு நாயகர்களுக்கு வாய்ப்பளிக்கவும் ஏதுவாக அமையும்).
 • பழைய இதழ்களின்(XIII) அட்டைப்படங்களை இவ்விதழில் நினைவு கூறலாம்.
 • பக்கங்களை Edit-செய்யாமல் பக்காவான,முழுமையான 'Complete Collection'-னாக வெளியிடலாம்.
 • ஒவ்வொரு பாகத்தின் Cover Page-க்கும் ஆங்கில ஒரிஜினல்களின அட்டைகளையே பயன்படுத்தலாம். 
XIII - ஒரு வண்ண முன்னோட்டம்:

மீண்டுமொரு புதிய பதிவுடன் விரைவில் நண்பர்களை சந்திக்கிறேன், அதுவரை  Hava a lot fun with COMICS...! 

16 comments:

 1. வாவ் பெண்டாஸ்டிக் சகோ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

   Delete
 2. சூப்பர் ஜி! தொடர்ந்து எழுதவும்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...! நேரமின்மை காரணமாக வெகு காலத்திற்கு (தாமதத்திற்கு) பின்னர் பதிவிட்டுள்ளேன்.தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் நண்பரே, அதுவே எனது ஆசையும் கூட...!

   Delete
 3. வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

   Delete
 4. அருமை தொடரவும் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

   Delete
 5. Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

   Delete
 6. அருமை! அருமை! ஆவலைத்தூண்டும் பதிவு! குறிப்பாய் அந்த வண்ணப்பக்கங்கள் அட்டகாசம்!!

  வழக்கம்போலவே, நல்ல எழுத்து நடை! தொடருங்கள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

   Delete
 7. அருமை நண்பா :-)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

   Delete
 8. Replies
  1. Thanks for the visit and opinion Mr.Unknown Friend

   Delete