நண்பர்களுக்கு வணக்கம்,
நீண்ட காலமாய் எனக்குள்ளிருக்கும் காமிக்ஸ் காதலையும்,பகிர்வுகளையும்,அனுபவங்களையும் இன்னபிற நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்ளவே இந்த பிளாக்-கை ஆரம்பித்திருக்கிறேன் நண்பர்களே. . .
குறிப்பு: இந்தப்பதிவு ஏற்கனவே ஜுன் 09-ம் தேதி முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுதான் நண்பர்களே. புதிய பதிவுடன்தான் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன்.ஆனால் இந்த தொடக்கம்தான் சரியாக இருக்குமெனப்பட்டது.ஆக . . . ஆரம்பித்தாயிற்று . . . !
காமிக்ஸ் என்ற ஒரு வார்த்தையை உச்சரிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி, எழும் நினைவலைகள், உண்டான நட்புகள், நடந்த சம்பவங்கள், வாங்கிய அர்ச்சனைகள், சிலபல இழப்புகள் என அனைத்துமே இனிப்பானவைதான்.
காமிக்ஸ் என்பது ஒரு தனி உலகம் (மாய உலகம்), அது அனைத்தையும் மறக்கச்செய்யும் அதைத்தவிர. நான் அவ்வுலகத்துக்குள் வந்தது 1994-ம் வருடம்.அதுவரை தீபாவளி என்றாலே சிவகாசிப்பட்டாசுதான் ஞாபகம் வரும்.அவ்வருடம் பட்டாசு வாங்கப்போய் பட்டாசுடன் காமிக்ஸும் வாங்கி வந்தேன்.லயன்&முத்து காமிக்ஸ்-ம் சிவகாசியிலிருந்துதான் வருகிறது என பின்னாட்களில் தெரிந்துகொண்டேன்.நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் பலரக விலைகளில் இருந்தன.நான் ஒரு தடிமனான புத்தகத்தை கையில் எடுத்து வைத்திருந்தேன் (என்ன புத்தகம் என்று நினைவில் இல்லை.அட்டை மட்டும் பச்சை&சிகப்பு வண்ணத்தில் இருந்ததாக நினைவு), கடைக்காரர் விலை ரூ.15 என்றார்.அப்பாவின் முகத்தைப்பார்த்துவிட்டு ரூ.4/- விலையிலுள்ள ஒரு புத்தகத்தை எடுத்தேன்.’சைனா கபாலம்’ என்ற பெயரே ஞாபகத்தில் உள்ளது.தடிமனான பாக்கெட் சைஸ் புத்தகம்.பட்டாசு வாங்கும்போதுகூட அந்த புத்தகமே என் மனதில் நிழலாடியது.வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக புத்தகத்தை எடுத்தேன், அதில் பின் அடிக்கப்பட்டிருந்தது.ஆச்சர்யத்துடன் அம்மாவிடம் புத்தகத்தை எடுத்துச்சென்றேன்.பின் -யை பிரிக்க இயன்றவரை பல முஸ்தீபுகள் செய்தும் முடியவில்லை.கடைசியாக பின் பிரிக்கப்பட்டபோது புத்தகமும் பாதி இரண்டானது. அழுகைவராத குறையுடன் பக்கங்களை சேர்த்து படிக்க ஆரம்பித்த எனக்கு பல ஆச்சர்யங்களையும், அழகியலையும் அறிமுகப்படுத்தப்போவது இதுதான் (ஏன்? நான் எனது தொழிலாக சினிமாவை தேர்ந்தெடுக்கவும் . . .!) என அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
இரண்டொரு நாட்களுக்குப்பிறகு தீபாவளி குக்ஷியில் நான் தவறவிட்ட புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன், இன்றுவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். முதல் வாசிப்பிற்கு பின்னர் எனக்கும், காமிக்ஸ்க்குமான இடைவெளி எத்தனைக்காலங்கள் என்று தெரியவில்லை, அதற்காக நான் வருத்தப்பட்ட நாட்கள் அதிகம்.
மறுபடியும் காமிக்ஸ். இம்முறை எனது முறை.கொடைக்கானலில் இரண்டே புத்தகக்கடைகள்தான் உண்டு.ஒன்று நீதிராஜன் புத்தகக்கடை, மற்றொன்று பேப்பர்கடை என்றழைக்கப்படும் புத்தகக்கடை. பேப்பர்கடைக்கு அப்பாவுடன் சென்ற எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.அவர் எனக்காக ஆசையுடன் ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கித்தந்தார்.ராணி காமிக்ஸ்-ன் ‘கொலைகாரன் கோட்டை’ புத்தகமே அது.நான் படித்த முதல் கெளபாய் கதையும் அதுவே…!
எனது காமிக்ஸ் சேகரிப்பு ஆரம்பித்ததும் இந்த காலகட்டத்தில் தான்.அதற்குக் காரணம் ராணி காமிக்ஸ்ன் கவர்ச்சிகரமான அட்டைபடமும், முகமூடி வீரர் மாயாவி என்றழைக்கப்படும் வேதாளரும்தான்.அடர்ந்த வனாந்திரமும், மண்டைஓட்டு குகையில் டெவிலுடனும், மாயாவி முத்திரை இடுகிறேன் பேர்வழி என்று பக்கத்து பெஞ்சுகாரணின் மூக்கை உடைத்துமாக காமிக்ஸ் காதல் வளர்ந்துகொண்டே சென்றது.
பேப்பர்கடையில் ராணி காமிக்ஸ் மட்டுமே கிடைத்து வந்தது.அதிகரித்துவந்த அதீத காமிக்ஸ் காதல், 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதி தவிர மற்ற நாட்களிலும் பேப்பர்கடையை நோக்கி நடையைக்கட்ட வைத்தது (1 மற்றும் 16ம் தேதி எவ்வளவு முக்கியமானது என்று நம் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை).அந்த சமயத்தில் என் சகநண்பன் ’பலே பாலு’-வைத்து ஊருக்கே படம் காட்டிகொண்டிருந்தான், அவனிடமிருந்து எப்படியாவது அந்த புத்தகத்தை கைப்பற்றுவது எனத்தீர்மானித்தேன்.அங்கேயும் குறுக்கே நின்றது பட்ஜெட், அட்டை இல்லாத அந்த புத்தகத்துக்கு அவன் கேட்ட விலை, என் இரண்டு மாதகால சேமிப்பு… ரூ.10/-
(காமிக்ஸ் பிஸ்னஸ் அப்போதே ஆரம்பித்துவிட்டது நண்பர்களே!).
என்ன செய்யலாம் என்ற நினைப்பும், அந்த புத்தகத்தை படித்தே ஆகவேண்டும் என்ற வெறியும் மண்டையைக்குடைந்து கொண்டிருந்தது.புத்தகத்தின் ஒரிஜினல் விலை அவன் கூறிய விலையைவிட குறைவு எனத்தெரிந்தபின் புத்தகத்தை விலைகொடுத்து வாங்க தீர்மானித்தேன். அப்புத்தகம் நீதிராஜன்கடையில்தான் கிடைக்கிறது என்பதை அறிய இரண்டு சேமியா ஐஸ்-ம், நாலைந்து மாங்கீற்றுகளும் தேவைப்பட்டன. வாங்கவேண்டும் என்று தீர்மானமாகிவிட்டது, கிடைக்குமிடமும் தெரிந்துவிட்டது அப்பா ஞாயிற்றுக்கிழமைதான் கடைக்கு அழைத்துச்செல்வார், அதற்கு இன்னும் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும்…
- தொடரும்
- தொடரும்
Good luck. Keep going!
ReplyDeleteThank you bro . . .
Deleteall the best bro.. adutha episode padika aavalaai ullen
ReplyDeleteThank you bro . . .
DeleteWeldon bro
ReplyDeleteவெல்கம் டூ ப்ளாக்வேல்டு ப்ரோ....வாழ்த்துக்கள்.... இதுபோன்ற பழைய நினைவுகளை படிப்பது எப்போதும் எனக்கு சுகானுபவமே.....சூப்பர்....தொடருங்கள்.....
ReplyDeleteநன்றி நண்பரே. . .
Delete@ சண்முக சுந்தரம்
ReplyDelete"அட...நாம காமிக்ஸ் படிக்கறப்போ ஏற்பட்ட..ஏற்படற உணர்வுகள் மாதிரியே இவருக்கும் ஏற்பட்டிருக்கே..." என எல்லோரோட மனதையும் பிரதிபலிக்கற மாதிரியே இருக்கு உங்கள் அனுபவ பகிர்வு..! சிலர் 'இந்த காமிக்ஸ் படிச்சா என்னதான் மனசுல தோணுது..? அப்படி என்னதான் இருக்கு கொஞ்சம் சொல்லேன்னு கேக்கறப்போ... அது..ம்... சொன்னாபுரியாது...' என சொல்லதடுமாறும் உணர்வுகளை அழாக வார்த்தையில் வடித்திருக்கிறீர்கள்..! பாரட்டுக்கள் நண்பரே, தொடருங்கள்..!
நீங்கள் ரசித்த முதல் ராணி காமிக்ஸ் 275 வது வெளியிடான 'கொலைகாரன் கோட்டை' அனைவரும் முன்னட்டை பார்க்க....இங்கே'கிளிக்'
நன்றி நண்பரே. . . இரண்டாம் பாகம் டைப்பிக்கொண்டிருக்கிறேன். விரைவில் எதிர்பார்க்கலாம்.
Deleteவாழ்த்துக்கள் நண்பரே.....
ReplyDeleteதொடர்ந்து பதிவிடுங்கள் ....
நன்றி நண்பரே. . .
Deleteவாழ்த்துக்கள் நண்பரே.....
ReplyDeleteதொடர்ந்து பதிவிடுங்கள் ....
நன்றி நண்பரே. . . கண்டிப்பாக. விரைவில் எதிர்பார்க்கலாம். . . !
DeleteCasinos in the UK - How to find good games - GrizzGo
ReplyDeleteSo, what 1xbet 먹튀 do we mean by casinosites.one “casinos in the UK”? gri-go.com to find a casino and live casino games on worrione a mobile phone 토토 device in 2021.